Published : 13 Oct 2025 08:01 AM
Last Updated : 13 Oct 2025 08:01 AM

திண்டுக்கல்லில் தொடர் தோல்வி... தென் மாவட்ட கணக்கை தொடங்கப் போராடும் பாமக!

திண்டுக்கல்லில் பயணம் மேற்கொண்டு மக்களை சந்தித்த பாமக தலைவர் அன்புமணி. படம்: நா.தங்கரத்தினம்.

தேர்தலுக்கு தேர்தல் திண்டுக்கல் மக்கள் தோல்வியையே பரிசாக தந்தாலும் தென் மாவட்டங்களின் நுழைவு வாயிலான திண்டுக்கல் மாவட்டத்தில் எப்படியாவது வெற்றிக்கொடி நாட்டி தனது ஆளுகை எல்லையை விரிவுபடுத்த விடாமுயற்சியுடன் போராடும் பாமக, இம்முறையும் அதற்கான திட்டத்துடன் இருக்கிறது.

வட மாவட்​டங்​களுக்​குள் சுருங்​கி​விட்ட கட்சி என்ற இமேஜை உடைத்து தென் மாவட்​டங்​களி​லும் தடம் பதிக்க நீண்ட நாட்​களாகவே போராடி வருகிறது பாமக. அதற்​காவே மாநில பொருளாளர் பதவியை திண்​டுக்​கல் மாவட்​டத்​தைச் சேர்ந்த தில​க​பா​மாவுக்​குக் கொடுத்​தது. இந்து வன்னியர்களும் கிறிஸ்தவ வன்​னியர்​களும் பரவலாக வசிக்​கும் திண்​டுக்​கல் பகுதி தான் பாமக-​வின் குறி.

2011-ல் திமுக கூட்​ட​ணி​யில் இருந்த பாமக, திண்​டுக்​கல் தொகு​தி​யில் பால்​பாஸ்​கரை நிறுத்​தி​யது. இவரை எதிர்த்து அதி​முக கூட்​ட​ணி​யில் சிபிஎம் வேட்​பாளர் பால​பாரதி போட்​டி​யிட்​டார். இரண்டு திரா​விடக் கட்​சிகளும் நேரடி​யாக போட்​டி​யி​டாத போதும் அந்​தத் தேர்​தலில் பாமக தோற்​றுப் போனது.

தோற்​றாலும் தளராத பாமக, 2019 மக்​கள​வைத் தேர்​தலில் அதி​முக கூட்​ட​ணி​யில் திண்​டுக்​கல் தொகு​தி​யில் போட்​டி​யிட்​டது. ஆனால், அப்​போது பாமக சார்​பில் நிறுத்​தப்​பட்ட ஜோதி​முத்து, திமுக-​வின் அறி​முக வேட்​பாளர் வேலுச்​சாமி​யிடம் சுமார் 5 லட்​சம் வாக்​கு​கள் வித்​தி​யாசத்​தில் தோற்றுப் போனார். ஆனாலும் தளர​வில்லை பாமக தலை​வர்​கள்.

2021 சட்​டமன்​றத் தேர்​தலை அதி​முக கூட்​ட​ணி​யுடன் சந்​தித்த பாமக, கட்​சி​யின் பொருளாளர் தில​க​பா​மாவை திமுக துணைப் பொதுச் ​செய​லா​ள​ரும் அப்​போதைய முன்​னாள் அமைச்​சரு​மான ஐ.பெரிய​சாமியை எதிர்த்து திண்​டுக்​கல் ஆத்​தூர் தொகு​தி​யில் தைரிய​மாக நிறுத்​தி​யது. அந்​தத் தேர்​தலில், தில​க​பாமா சுமார் 1 லட்​சத்து 35 ஆயிரம் வாக்​கு​கள் வித்​தி​யாசத்​தில் தோற்​றுப் போனார். அதி​முக ஓட்​டு​களே அந்​தத் தேர்​தலில் ஐ.பெரிய​சாமி​யின் ‘பெட்​டிக்​கு’ திரும்​பிய அதிசய​மும் நடந்​தது.

ஆத்​தூரில் ஆக மோச​மாக தோற்​றாலும் களங்​காத பாமக, 2024 மக்​கள​வைத் தேர்​தலிலும் திண்​டுக்​கல்லை விட​வில்​லை. அப்​போது பாஜக கூட்டணியில் போட்​டி​யிட்ட பாமக, மீண்​டும் தில​க​பா​மாவையே திண்​டுக்​கல் வேட்​பாள​ராக நிறுத்​தி​யது. அப்​போது மூன்​றாமிடத்​துக்கு தள்​ளப்​பட்ட தில​க​பாமா சுமார் 1 லட்​சத்து 12 ஆயிரம் வாக்​கு​களைப் பெற்​றார். 2016-ல் தமிழகம் முழு​வதும் பாமக தனித்​துப் போட்​டி​யிட்ட போது திண்​டுக்​கல் மாவட்​டத்​தில் சில தொகு​தி​களில் சுமார் 2,000 ஆயிரம் வாக்​கு​களை பெற்​றது பாமக. அதேசம​யம் ஆத்​தூரில் பாஜக-வை விட பின்​தங்​கிப் போனது.

இம்​முறை​யும் வெற்​றிக் கூட்​ட​ணிக் கனவு​களோடு காத்​திருக்​கும் பாமக, திண்​டுக்​கல் மாவட்​டத்​தில் தடம்​ப​திக்க வேண்​டும் என்​ப​தி​லும் விடா​முயற்சி​யுடன் இருக்​கிறது.

இதுகுறித்து நம்​மிடம் பேசிய திண்​டுக்​கல் கிழக்கு மாவட்ட பாமக தலை​வர் திருப்​ப​தி, “தென் மாவட்​டங்​களுக்​கான நுழைவு வாயில் என்​ப​தால் தான் திண்​டுக்​கல் மாவட்​டத்​தில் வெற்​றிக் கணக்​கைத் தொடங்க விடா​மல் முயற்​சிக்​கிறோம்.

அதே நம்​பிக்​கை​யுடன் தான் கடந்த வாரம் இந்த மாவட்​டத்​தில் பிரச்​சா​ரப் பயணம் மேற்​கொண்​டார் தலை​வர் அன்​புமணி. முந்​தைய தேர்​தல் முடிவுகளைப் பற்றி கவலைப்படா​மல் இம்​முறை​யும் திண்​டுக்​கல் மாவட்​டத்​தில் நாம் போட்​டி​யிட்டே ஆகவேண்​டும் என்ற கருத்தை அவரிடம் வலியுறுத்​திச் சொல்லி இருக்​கிறோம்” என்​றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x