Published : 11 Oct 2025 01:22 PM 
 Last Updated : 11 Oct 2025 01:22 PM
சென்னை: “அதிமுகவுடன் விஜய் கூட்டணி சேர்ந்தால் பாஜகவைக் கூட பழனிசாமி கழற்றிவிடத் தயாரக இருப்பார். ஆனால் விஜய் வருவாரா என்பது தெரியாது. பழனிசாமியை முதல்வர் ஆக்குவதற்காகவா விஜய் கட்சியை ஆரம்பித்தார்.. அவரது தொண்டர்கள் அதை ஏற்பாரா? இல்லை விஜய் வந்து எடப்பாடி பழனிசாமியை முதல்வராக தூக்கி பிடிப்பாரா?” என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் சாடியுள்ளார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, “ 2024 மக்களவைத் தேர்தலின் போது பாஜக கூட்டணியில் இருந்து, அதிமுக ஏன் வெளியேறியது. அது பாஜகவுக்கு முக்கிய தேர்தலாகவும் அமைந்திருந்த சமயத்தில், கூட்டணியை விட்டு வெளியே வந்து பாஜவுக்கு எதிராக பேசினார்கள். பழனிசாமி நம்பக தன்மையற்றவர், அவருக்கு துரோகத்தை தவிர எதுவும் தெரியாது.
அதிமுகவுடன் விஜய் கூட்டணி சேர்ந்தால் பாஜகவைக் கூட பழனிசாமி கழற்றிவிடத் தயாரக இருப்பார். ஆனால் விஜய் வருவாரா என்பது தெரியாது. பழனிசாமியை முதல்வர் ஆக்குவதற்காகவா விஜய் கட்சியை ஆரம்பித்தார்.. அவரது தொண்டர்கள் அதை ஏற்பாரா? இல்லை விஜய் வந்து எடப்பாடி பழனிசாமியை முதல்வராக தூக்கி பிடிப்பாரா?
வரவிருக்கும் தேர்தலில் அதிமுக கூட்டணி வெறும் 15 சதவீதத்துக்கு கீழ் தான் வரும். பழனிசாமி தான் முதல்வர் வேட்பாளர் என்று சொன்ன போதில் இருந்தே அந்தக் கூட்டணி பலவீனமாகி கொண்டு தான் இருக்கிறது. பாஜகவும் இதை கருத்தில் கொள்ள வேண்டும்.
தன் கட்சி தொண்டர்களை வைத்தே தவெக கொடியை தூக்கிப் பிடிக்க வைத்துள்ளார் எடப்பாடி பழனிசாமி. இதில் இருந்தே தெரிகிறது, விஜய்யின் தலைமையை ஏற்று கூட்டணிக்குச் செல்ல பழனிசாமி தயாராகிவிட்டார். அந்த அளவிற்கு அதிமுக பலவீனமாகிவிட்டது. எங்கள் கூட்டணி குறித்து டிசம்பர் மாதத்துக்குள் தான் முடிவெடுக்க முடியும்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
								
WRITE A COMMENT