Last Updated : 10 Oct, 2025 04:33 PM

 

Published : 10 Oct 2025 04:33 PM
Last Updated : 10 Oct 2025 04:33 PM

21 குழந்தைகள் உயிரிழக்க காரணமான இருமல் மருந்து: தமிழக அரசுக்கு அதிமுக 5 கேள்விகள்!

சென்னை: 21 குழந்தைகள் இருமல் மருந்து குடித்து உயிரிழக்க காரணமான ஸ்ரீசன் மருந்து நிறுவனத்தின் லைசன்ஸ் திரும்பப் பெறப்படுவதாக திமுக அரசு அறிவித்த பிறகு எடுத்த நடவடிக்கைகள் என்ன என்று அதிமுக கேள்வியெழுப்பியுள்ளது.

இது தொடர்பாக அதிமுகவின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் வெளியான பதிவில், ‘திமுக அரசுக்கு 5 கேள்விகள்: 21 குழந்தைகள் இருமல் மருந்து குடித்து உயிரிழக்க காரணமான ஸ்ரீசன் மருந்து நிறுவனத்தின் லைசன்ஸ் திரும்பப் பெறப்படுவதாக திமுக அரசு அறிவித்த பிறகு எடுத்த நடவடிக்கைகள் என்ன?

மருத்துவத் துறை சார்பில் சுற்றறிக்கை, அல்லது அரசாணை ஏதேனும் வெளியிடப் பட்டதா?. ஏற்கனவே மருந்து கடைகளுக்கு விநியோகம் செய்யப்பட்ட மருந்துகள் விற்பனைக்கு தடை விதித்து அறிவிப்பு வெளியிட்டீர்களா?

தமிழகம் முழுவதும் உள்ள மருந்து கடைகளில் இருந்து ஸ்ரீசன் நிறுவன மருந்துகள் முழுமையாக அகற்றப்பட்டதை உறுதி செய்ததா திமுக அரசு?

முதல்வருக்கு ப்ரோமோஷன் செய்ய அவ்வப்போது விளம்பரம் கொடுக்கிறீர்களே... 21 அப்பாவி குழந்தைகள் உயிரிழக்க காரணமான இந்த நிறுவன மருந்துகளை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்படுவது குறித்து செய்தித் தாள்களில், ஊடகங்களில் ஏதேனும் விளம்பரம் வெளியிட்டீர்களா?’ எனக் கேள்வி எழுப்பியுள்ளது.

இருமல் மருந்து சர்ச்சை பின்னணி: காஞ்​சிபுரம் மாவட்​டம், சுங்​கு​வார்​சத்​திரம் பகு​தி​யில் ஸ்ரீசென் பார்மா என்ற மருந்து உற்​பத்தி நிறு​வனம் செயல்​பட்டு வரு​கிறது. இந்த நிறு​வனத்​தில் தயாரிக்​கப்​பட்ட ‘கோல்ட்​ரிப்’இரு​மல் மருந்தை உட்​கொண்ட மத்​தி​யப் பிரதேசம், ராஜஸ்​தான் மாநிலங்​களைச் சேர்ந்த பல குழந்​தைகளுக்கு அடுத்​தடுத்து உடல்​நலக் குறைவு ஏற்​பட்​டதோடு, 20-க்​கும் மேற்​பட்ட குழந்​தைகள் உயி​ரிழந்​தனர்.

குழந்​தைகளின் உயி​ரிழப்​புக்கு இந்த இரு​மல் மருந்​து​தான் காரணம் என்று ராஜஸ்​தான் மற்​றும் மத்​தி​யப் பிரதேச மாநிலங்​களில் புகார்​கள் எழுந்​தன. இதைத்​தொடர்ந்​து, தங்​கள் மாநிலங்​களில் ஏற்​பட்ட உயி​ரிழப்​பு​கள் குறித்து தீவிர நடவடிக்கை எடுக்​கக் கோரி சம்​பந்​தப்​பட்ட மாநில அரசுகள், தமிழக அரசுக்குகடிதம் மூலம் வலி​யுறுத்​தின.குழந்​தைகள் உயி​ரிழப்பை அடுத்​து, தமிழக அரசு ‘கோல்ட்​ரிப்' மருந்தை தமிழகத்தில் விற்​பனை செய்யத் தடை விதித்​தது. இந்நிலை​யில் மத்​தி​யப் பிரதேச சிறப்பு புல​னாய்​வுக் குழு​வினர் மற்​றும் உயி​ரிழப்பு ஏற்​பட்டமாநிலங்​களின் மருந்து கட்​டுப்​பாட்டு அதி​காரி​கள் சுங்​கு​வார்​சத்​திரத்​தில் உள்ள ஸ்ரீசென் ஃபார்மா மருந்து உற்​பத்தி ஆலைக்கு வந்து திடீர் ஆய்வு செய்து, மருந்து தயாரிப்​புக்​குப்பயன்​படுத்​தப்​பட்ட மூலப் பொருள்​கள், தயாரிக்​கப்​பட்ட மருந்​தின் மாதிரி​களை பறி​முதல் செய்தனர்.

இந்​நிலை​யில், குழந்​தைகள் உயி​ரிழந்த விவ​காரத்​தில் கோல்ட்​ரிப் நிறு​வனத்​தின் உரிமை​யாளர் ரங்​க​நாதனை(75) மத்​தி​யப் பிரதேச போலீ​ஸார் சென்னை கோடம்​பாக்​கம், நாகார்​ஜூனா நகர், 2-வது தெரு​வில் உள்ள அவரது வீட்​டில் நேற்று அதி​காலை கைது செய்​தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x