Published : 10 Oct 2025 07:01 AM
Last Updated : 10 Oct 2025 07:01 AM

கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில் சேவையில் இன்று மாற்றம்

சென்னை: செங்​கல்​பட்டு யார்​டில் பொறி​யியல் பணி நடை​பெற உள்​ள​தால், சென்னை கடற்​கரை - செங்​கல்​பட்டு மின்​சார ரயில் சேவை​யில் இன்று மாற்​றம் செய்​யப்​பட்​டுள்​ளது. சென்னை கடற்​கரை - திரு​மால்​பூருக்கு இன்று காலை 7.27-க்கு புறப்​படும் மின்​சார ரயில், கடற்​கரை - செங்​கல்​பட்​டுக்கு இன்று காலை 9.31, 9.51, 10.56, பகல் 11.40, நண்​பகல் 12.25 ஆகிய நேரங்​களில் இயக்​கப்​படும் மின்​சார ரயில்​கள் ரத்து செய்​யப்​படு​கின்றன.

திரு​மால்​பூர் - கடற்​கரைக்கு காலை 11.05-க்கு இயக்​கப்​படும் மின்​சார ரயில், செங்​கல்​பட்டு - கடற்கரைக்கு பகல் 11.30, நண்​பகல் 12, மதி​யம் 1.10, 1.45, பிற்பகல் 2.20 ஆகிய நேரங்​களில் இயக்​கப்​படும் ரயில்​கள் ரத்து செய்​யப்​படு​கின்றன. இதற்கு மாற்​றாக, கடற்​கரையில் இருந்து செங்​கல்​பட்​டு, சிங்​கப்​பெரு​மாள்​கோ​வில், காட்​டாங்​குளத்​தூர் இடையே சிறப்பு ரயில்​கள் இயக்​கப்படும் என சென்னை ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x