Published : 10 Oct 2025 06:21 AM
Last Updated : 10 Oct 2025 06:21 AM

​காஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் கால வரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

நாமக்​கல்: காஸ் டேங்​கர் லாரி​ உரிமை​யாளர்​கள் கால​வரையற்ற வேலைநிறுத்​தப் போராட்​டத்தை அறி​வித்​துள்​ளதால், 5 மாநிலங்​களில் சமையல் காஸ் தட்​டுப்​பாடு ஏற்​படும் அபா​யம் உரு​வாகி​யுள்​ளது. தமிழ்​நாடு, கேரளா, கர்​நாட​கா, ஆந்​தி​ரா, தெலங்​கா​னா, புதுச்​சேரி மாநிலங்​களை உள்​ளடக்​கிய தென்​மண்டல காஸ் டேங்​கர் லாரி உரிமை​யாளர்​கள் சங்​கம் நாமக்​கல்லில் இயங்கி வரு​கிறது.

இந்த சங்​கத்​தில் உள்ள காஸ் டேங்​கர் லாரி​கள், இந்​தி​யன் ஆயில், பாரத் பெட்​ரோலி​யம், ஹிந்​துஸ்​தான் பெட்​ரோலி​யம் ஆகிய நிறு​வனங்​களுக்கு சொந்​த​மான எண்​ணெய் சுத்​தி​கரிப்பு நிலை​யங்​களில் இருந்து பாட்​டிலிங் மையங்​களுக்கு சமையல் காஸ் கொண்டு செல்​லும் பணிக்கு ஒப்​பந்த அடிப்​படை​யில் பயன்​படுத்​தப்​படு​கின்​றன.

மொத்​தம் 5 ஆயிரம் டேங்​கர் லாரி​கள் ஒப்​பந்த அடிப்​படை​யில் இயக்​கப்​படு​கின்​றன. இந்​நிலை​யில், இந்த ஆண்​டுக்​கான வாடகை ஒப்​பந்​தத்​தில் 700-க்​கும் அதி​க​மான காஸ் லாரி​களுக்கு வேலை​வாய்ப்பு கிடைக்​க​வில்​லை. இந்​நிலை​யில், நாமக்​கல்​லில் தென்​மண்டல காஸ் டேங்​கர் உரிமை​யாளர்​கள் சங்க அவசரப் பொதுக்​குழுக் கூட்​டம் நேற்று நடை​பெற்​றது.

இதில் பங்​கேற்ற அகில இந்​திய மோட்​டார் டிரான்​ஸ்​போர்ட் காங்​கிரஸ் தலை​வர் சண்​முகப்​பா, பின்​னர் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: 700-க்​கும் மேற்​பட்ட லாரி​களுக்கு ஒப்​பந்​தம் வழங்​காத​தால் டேங்​கர் லாரி உரிமை​யாளர்​கள் வேலை​வாய்ப்பு இழந்​து, வாகன கடனைக் கட்ட முடி​யாமல் பாதிக்​கப்​பட்​டுள்​ளனர்.

இது தொடர்​பாக மத்​திய அரசின் எண்​ணெய் நிறுவன அதி​காரி​கள் பேச்​சு​வார்த்தை நடத்த வேண்​டும். தகு​தி​யான அனைத்து காஸ் டேங்​கர் லாரி​களுக்​கும் வேலை​வாய்ப்பு வழங்க வேண்​டும். அது​வரை தென்​னிந்​தியா முழு​வதும் உள்ள 5,000 காஸ் டேங்​கர் லாரி​கள் இயங்​காது. இவ்​வாறு அவர் கூறி​னார். காஸ் டேங்​கர் லாரி உரிமை​யாளர்​கள் வேலைநிறுத்​தப் போராட்​டம் நீடித்​தால், தமிழகம் உட்பட 5 மாநிலங்​களில் சமையல் காஸ் சிலிண்​டர் தட்​டுப்​பாடு ஏற்​படும் என்​று டேங்​கர் லாரி உரிமை​யாளர்​கள் தெரி​வித்​தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x