Published : 10 Oct 2025 06:04 AM
Last Updated : 10 Oct 2025 06:04 AM

தமிழகம், புதுச்சேரியை சேர்ந்த 47 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது

ராமேசுவரம்: தமிழகம், புதுச்சேரியை சேர்ந்த மீனவர்​களின் 5 படகு​களை சிறைபிடித்த இலங்கை கடற்​படை​யினர், அதிலிருந்த 47 மீனவர்​களை கைது செய்​தனர். ராமேசுவரம் மீன்​பிடித் துறை​முகத்​திலிருந்து நேற்று முன்​தினம் 400-க்​கும் மேற்​பட்ட விசைப்படகு​களில் 2,000-க்​கும் மேற்​பட்ட மீனவர்​கள் கடலுக்​குச் சென்​றனர்.

அன்று இரவு தலைமன்​னார் அருகே மீன்​பிடித்​துக் கொண்​டிருந்​த​போது ஹரி​கிருஷ்ணன், ஜோசப், நெப்​போலியன், ஜெப​மாலை ராஜா ஆகியோ​ருக்​குச் சொந்​த​மான 4 விசைப்​படகு​களை, எல்லை தாண்டி வந்​த​தாகக் கூறி இலங்கை கடற்​படை​யினர் சிறைபிடித்​தனர்.

மேலும், படகு​களில் இருந்த 30 மீனவர்​களை கைது செய்​து, தலைமன்​னார் கடற்​படை முகா​முக்கு கொண்டு சென்​றனர். பின்​னர், அனை​வரை​யும் மீன்​வளத் துறை​யினரிடம் இலங்கை கடற்​படை​யினர் ஒப்​படைத்​தனர். மன்​னார் நீதி​மன்​றத்​தில் ஆஜர்​படுத்​தப்​பட்ட மீனவர்​களை அக். 23-ம் தேதி வரை நீதி​மன்​ற காவலில் வைக்க நீதிபதி உத்​தர​விட்​டார்.

இதையடுத்து அனை​வரும் வவுனியா சிறை​யில் அடைக்​கப்​பட்​டனர். இலங்கை கடற்​படை​யின​ரால் கைது செய்​யப்​பட்ட ராமேசு வரம் மீனவர்​களில் ஒரு​வ​ரான முனிய​ராஜிட​மிருந்து 30 கிராம் கஞ்​சாவை இலங்கை கடற்​படை​யினர் பறி​முதல் செய்​தனர். விசா​ரணை​யில், அவர் தனது சொந்த பயன்​பாட்​டுக்​காக கஞ்​சாவை வைத்​திருந்​த​தாக தெரி​வித்​துள்​ளார். இதையடுத்​து, அவர் மீது கஞ்சா வைத்​திருந்​த​தாக வழக்​குப் பதிவு செய்து விசா​ரிக்க போலீ​ஸார் நடவடிக்கை எடுத்து வரு​கின்​றனர்.

17 மீனவர்​கள் கைது... அதே​போல, நெடுந்​தீவு அருகே மீன்​பிடித்​துக் கொண்​டிருந்த, புதுச்சேரி மாநிலம் காரைக்​கால் பகு​தி​யைச் சேர்ந்த விஜயன் சிவ​ராமன் என்​பவருக்​குச் சொந்​த​மான விசைப்​படகை​யும், அதிலிருந்த 17 மீனவர்​களை​யும் இலங்கை கடற்​படை​யினர் சிறைபிடித்​தனர். பின்​னர், 17 மீனவர்​களும் ஊர்​காவல்​துறை நீதி​மன்​றத்​தில் ஆஜர்​படுத்​தப்​பட்​டு, யாழ்ப்​பாணம் சிறை​யில் அடைக்​கப்​பட்​டனர்​.

முதல்​வர் ஸ்டா​லின் கடிதம்: ​முதல்​வர் மு.க.ஸ்​டா​லின், வெளி​யுறவுத் துறை அமைச்​சர் எஸ்​.ஜெய்​சங்​கருக்கு எழு​தி​யுள்ள கடிதத்​தில் கூறி​யிருப்​ப​தாவது: தமிழகம், காரைக்​காலைச் சேர்ந்த 47 மீனவர்​கள் இலங்கை கடற்​படை​யின​ரால் கைது செய்​யப்​பட்​டுள்​ளது அதிர்ச்​சி​யளிக்​கிறது. 2025-ல் ஒரே நாளில் அதிக எண்​ணிக்​கையி​லான மீனவர்​கள் கைது செய்​யப்​பட்ட முதல் நிகழ்வு இதுதான்.

மீனவர்​கள் தொடர்ந்து கைது செய்​யப்​படு​வ​தால் அவர்​களின் வாழ்​வா​தா​ரம் கடுமை​யாகப் பாதிக்​கப்​படு​கிறது. தமிழகத்​தைச் சேர்ந்த 74 மீனவர்​கள் இலங்​கை​யில் காவலில் உள்​ளனர். எனவே, மீனவர்​களை​யும், அவர்​களது படகு​களை​யும் விடுவிக்க உரிய தூதரக முயற்​சிகளை மேற்​கொள்ள வேண்​டும். இவ்​வாறு கடிதத்​தில் முதல்​வர் தெரி​வித்​துள்​ளார்.

தலைவர்கள் கோரிக்கை: மேலும், தமிழக காங்​கிரஸ் தலை​வர் கு.செல்​வப்​பெருந்​தகை, அமமுக பொதுச் செய​லா​ளர் டிடி​வி.​தினகரன். மனிதநேய மக்​கள் கட்​சித் தலை​வர் எம்​.எச்​. ஜ​வாஹிருல்​லா, அகில இந்​திய மீனவர் காங்​கிரஸ் தேசிய தலை​வர் எஸ்​.ஆம்​ஸ்ட்​ராங் பெர்​னாண்டோ ஆகியோ​ரும் மீனவர்​களை விடுவிக்க நடவடிக்கை எடுக்​கு​மாறு மத்​திய அரசை வலியுறுத்தியுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x