Published : 09 Oct 2025 06:31 AM
Last Updated : 09 Oct 2025 06:31 AM

உயர் நீதிமன்றம் அருகே வழக்கறிஞரின் ஸ்கூட்டர் மீது என் வாகனம் மோதவில்லை: திருமாவளவன் விளக்கம் 

சென்னை: சென்னை உயர் நீதிமன்றம் அருகே நடைபெற்ற தகராறு குறித்து விசிக தலைவர் திருமாவளவன் விளக்கமளித்துள்ளார். உச்ச நீதி​மன்ற தலைமை நீதிபதி பி.ஆர்​.க​வாய் மீது காலணியை வீச முயன்ற வழக்​கறிஞர் ராகேஷ் கிஷோர் மீது வன்​கொடுமை தடுப்​புச் சட்​டம் உள்​ளிட்ட பிரிவு​களின் கீழ் நடவடிக்கை எடுக்க வலி​யுறுத்​தி, சென்னை உயர் நீதி​ன்றம் அருகே வழக்​கறிஞர்​கள் நேற்று முன்தினம் ஆர்ப்​பாட்​டம் நடத்தினர்.

இதில் விசிக தலைவர் திருமாவளவன் பங்கேற்று திரும்பியபோது, அந்த வழி​யாக சென்று கொண்​டிருந்த ஸ்கூட்டர் மீது திரு​மாவளவன் சென்ற கார் மோது​வது​போல் சென்​றுள்​ளது. இதையடுத்​து இருசக்கர வாக​னத்​தில் சென்ற நபர், அவரது வாக​னத்தை நிறுத்​தி​விட்​டு, ஏன் இப்​படி காரை அஜாக்​கிரதை​யாக ஓட்டி வரு​கிறீர்​கள் என கண்​டித்​துள்​ளார். இதையடுத்​து, இரு தரப்பினருக்கும் தகராறு, கைகலப்பு ஏற்பட்டது.

இதுதொடர்பாக திருமாவளவன் முகநூல் நேரலையில் பேசியதாவது: வேண்டுமென்றே வாக்குவாதம் அந்த வழக்கறிஞர் என் வாகனம் முன் தன் வண்டியை நிறுத்திவிட்டு, வேண்டுமென்றே வாக்குவாதத்தில் ஈடுபட்டார். கைகளை ஓங்கியவாறு வந்தார். அவர் தொடர்ந்து எதிர்த்து பேசவே கட்சியினர் அவரை தாக்க முயன்றனர். அதற்குள்ளாக காவல் துறையினர் அவரை பார்கவுன்சில் கட்டிடத்துக்கு அழைத்துச் சென்றுவிட்டனர். இதுதான் நடந்தது.

என் வாகனம் அவர் வண்டி மீது மோதவில்லை. ஆனால் சிலர் பொய்யான செய்திகளை பரப்புகின்றனர். அண்ணாமலை போன்றவர்கள் இதற்கு வக்காலத்து வாங்கி எனக்கு எதிரான கருத்துகளைப் பரப்புகின்றனர். விபத்து என்று சொல்லும் வகையில் எதுவும் நடைபெறவில்லை. இதை பெரிதுபடுத்தி தலைமை நீதிபதி கவாய் மீது காலணி வீச முயன்ற சம்பவத்தை திசை திருப்ப முயல்கின்றனர். ஆனால் இதற்கு பலியாகாமல் தலைமை நீதிபதி மீதான தாக்குதல் முயற்சியை கண்டித்து நீதிமன்ற வளாகங்களில் வழக்கறிஞர் அணியும், அமைப்பு ரீதியான மாவட்டங்களில் குறிப்பிட்ட இடைவெளியில் ஆர்ப்பாட்டங்களை நடத்த வேண்டும். இவ்வாறு அவர் தெரி வித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x