Published : 08 Oct 2025 06:11 AM
Last Updated : 08 Oct 2025 06:11 AM

முதல்வர் கோப்பைக்கான போட்டிகள் தொடக்கம்: உதயநிதி ஸ்டாலின் கோப்பையை அறிமுகம் செய்தார்

சென்னை கலைவாணர் அரங்கத்தில் நேற்று நடைபெற்ற விழாவில் 2025-ம் ஆண்டுக்கான முதல்வர் கோப்பையை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அறிமுகப்படுத்தினார். நிகழ்ச்சியில் அமைச்சர்கள் எஸ்.ரகுபதி, மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, கயல்விழி செல்வராஜ், மேயர் பிரியா, துறை செயலாளர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் ஜெ.மேகநாத ரெட்டி, துணைத் தலைவர் அசோக் சிகாமணி, பாரா பாட்மிண்டன் வீரர் மு.ச.சுதர்சன், வேக சறுக்கு வீராங்கனை ஜே.கார்த்திகா மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

சென்னை: தமிழ்​நாடு விளை​யாட்டு மேம்​பாட்டு ஆணை​யம் சார்​பில் நடத்​தப்​படும் முதல்வர் கோப்பை போட்​டிகளுக்​கான தொடக்க விழா சென்னை கலை​வாணர் அரங்​கில் நேற்று நடை​பெற்​றது. துணை முதல்​வர் உதயநிதி முதல்​வர் கோப்​பைக்​கான ஜோதியை ஏற்​றி​வைத்​து, கோப்​பையை அறி​முகம் செய்து வைத்​தார். தொடர்ந்​து, விளை​யாட்டு வீரர்​களின் கலை நிகழ்ச்​சிகள் நடத்​தப்​பட்​டன.

இதில் துணை முதல்​வர் உதயநிதி பேசி​ய​தாவது: திமுக அரசு பொறுப்​பேற்ற பிறகு முதல்​வர் கோப்​பைக்​கான போட்​டிகளை திரு​விழா​போல சர்​வ​தேச தரத்​தில் ஒவ்​வோர் ஆண்​டும் நடத்தி வரு​கிறோம். 2023-ல் நடந்த போட்​டிகளில் 3.5 லட்​சம் பேர் பங்​கேற்​றனர். அது கொஞ்​சம், கொஞ்​ச​மாக வளர்ந்​து, தற்​போது 16.28 லட்​சம் பேர் கலந்து கொள்​ளும் வகை​யில் உயர்ந்​திருக்​கிறது. தமிழகத்​தில் விளை​யாட்டை மக்​கள் இயக்​க​மாக கொண்​டாடி வரு​வதற்​கு, முதல்​வர் கோப்​பைக்​கான விளை​யாட்​டுப் போட்​டிகளும் முக்​கியக் காரண​மாகும்.

திறமை​யானவர்​கள் நகரங்​களில் மட்​டுமின்​றி, கிராமங்​களி​லும், மலைப் பகு​தி​களி​லும்​கூட இருப்​பார்​கள். அவர்​களைக் கண்​டறிந்​து, திறமை​களை வெளிப்​படுத்த வாய்ப்​பு​களை ஏற்​படுத்​தித் தரு​வது தமிழக அரசின் கடமை. அதை, முதல்​வர் கோப்பை மூல​மாக தமிழக அரசு செய்து வரு​கிறது. இந்த போட்​டிகளில் வெற்றி பெறு​பவர்​களுக்கு ரூ.37 கோடி பரிசுத் தொகை​யாக வழங்​கப்​படும். வெற்றி பெற்​றவர்​கள் பெறும் சான்​றிதழ்​கள் 3.5% இட ஒதுக்​கீட்​டின் கீழ் அரசு வேலைக்கு கணக்​கில் எடுத்​துக்​கொள்​ளப்​படும். இவ்​வாறு அவர் பேசி​னார்.

நிகழ்​வில், அமைச்​சர்​கள் எஸ்​.ரகுப​தி, மா.சுப்​பிரமணி​யன், பி.கே.சேகர்​பாபு, கயல்​விழி செல்​வ​ராஜ், எம்​.பி.க்​கள் தயாநிதி மாறன், கலாநிதி வீரா​சாமி, மேயர் பிரி​யா, விளை​யாட்​டுத் துறைச் செயலர் அதுல்ய மிஸ்​ரா, சிறப்​புத் திட்ட செய​லாக்​கத் துறைச் செயலர் பிரதீப் யாதவ், தமிழ்​நாடு விளை​யாட்டு மேம்​பாட்டு ஆணைய துணைத் தலை​வர் அசோக் சிகாமணி, உறுப்​பினர் செயலர்​ மேக​நாதரெட்​டி உள்​ளிட்​டோர்​ பங்​கேற்​றனர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x