Published : 08 Oct 2025 05:46 AM
Last Updated : 08 Oct 2025 05:46 AM

டிஎஸ்​பியை கைது செய்ய உத்​தர​விட்ட முதன்மை அமர்வு நீதிபதி செம்​மல் அரியலூருக்கு இடமாற்​றம்

சென்னை: காஞ்​சிபுரம் மாவட்​டம் வாலாஜா​பாத் காவல் நிலை​யத்​தில் பதிவு செய்​யப்​பட்ட வன்​கொடுமை தடுப்​புச்​சட்​டம் தொடர்பான வழக்கை விசா​ரித்த மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி பா.உ.செம்​மல், டிஎஸ்​பி​யான சங்​கர் கணேஷை கைது செய்ய கடந்த செப்​டம்​பரில் உத்​தர​விட்​டார்.

இந்த உத்​தரவை எதிர்த்து அரசு தரப்​பில் தொடரப்​பட்ட வழக்கை விசா​ரித்த உயர் நீதி​மன்​றம், மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதியான செம்​மலின் உத்​தரவு அசா​தா​ரண​மானது எனக்​கூறி டிஎஸ்​பியை கைது செய்ய பிறப்​பித்த உத்​தரவை ரத்து செய்​தது.

மேலும், இந்த விவ​காரத்​தில் நடந்​தது என்ன என்​பது குறித்து உயர் நீதி​மன்ற விஜிலென்ஸ் பதி​வாளர் விசா​ரித்து அறிக்கை தாக்​கல் செய்ய உத்​தர​விட்டு இருந்​தது. இந்​நிலை​யில் காஞ்​சிபுரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிப​தி​யான பா.உ.செம்​மலை அரியலூர் மாவட்ட சட்​டப்​பணி​கள் ஆணைக்​குழு நீதிப​தி​யாக இடமாற்​றம் செய்து உயர் நீதி​மன்ற தலை​மைப்​ப​தி​வாளர் எஸ்​.அல்லி உத்​தர​விட்​டுள்​ளார்.

இதே​போல சென்னை வணிக நீதி​மன்​றத்​தில் முதன்மை நீதிப​தி​யாக பணி​யாற்றி வரும் தீப்தி அறி​வுநிதி காஞ்​சிபுரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிப​தி​யாக​வும், திண்​டுக்​கல் மாவட்ட கூடு​தல் நீதிபதி​யான பி.வேல் ​முரு​கன், தஞ்​சாவூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிப​தி​யாக​வும், அங்கு பணி​யாற்​றிய பூரண ஜெய ஆனந்த் புதுக்​கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிப​தி​யாக​வும், அங்கு பணி​யாற்​றிய ஜெ.சந்​திரன், சேலம் மேட்​டூர் விரைவு நீதி​மன்ற கூடு​தல் மாவட்ட நீதிப​தி​யாக​வும், சென்னை குடும்​பநல நீதி​மன்ற 3-வது கூடு​தல் முதன்மை நீதிபதி வி.தேன்​மொழி, திருப்​பத்​தூர்​ மாவட்​ட நீதிப​தி​யாக​வும்​ இடமாறு​தல்​ செய்​யப்​பட்​டுள்​ளனர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x