Published : 08 Oct 2025 06:25 AM
Last Updated : 08 Oct 2025 06:25 AM

தேமுதிக பொதுச்​ செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தாயார் காலமானார்: முதல்வர், தலைவர்கள் அஞ்சலி

சென்னை: தேமு​திக பொதுச்​செய​லா​ளர் பிரேமலதா விஜய​காந்த்​தின் தாயார் அம்​சவேணி நேற்று கால​மா​னார். அவருக்கு முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் நேரில் சென்று அஞ்​சலி செலுத்​தி​னார். தேமு​திக பொதுச்​செய​லா​ளர் பிரேமலதா விஜய​காந்த், பொருளாளர் எல்​.கே.சுதீஷ் ஆகியோரின் தாயார் அம்​சவேணி(83) உடல்​நலக் குறைவு காரண​மாக கடந்த சில நாட்​களாக மருத்​து​வ​மனை​யில் சிகிச்சை பெற்று வந்த நிலை​யில் நேற்று காலை கால​மா​னார். அவரது உடல் சென்னை சாலிகி​ராமத்​தில் உள்ள சுதீஷ் வீட்​டுக்கு கொண்டு வரப்​பட்டு இறுதி அஞ்​சலிக்​காக வைக்​கப்​பட்​டது.

இதையடுத்து முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் நேரில் சென்று அம்​சவேணி​யின் உடலுக்கு அஞ்​சலி செலுத்​தி​னார். முதல்​வருடன் அமைச்​சர்​கள் எ.வ.வேலு, தங்​கம் தென்​னரசு, மா.சுப்​ரமணி​யன் ஆகியோர் அஞ்​சலி செலுத்​தினர். அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி, முன்​னாள் அமைச்​சர் செங்​கோட்​டையன், தமிழக பாஜக தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் உள்​ளிட்ட பல்​வேறு அரசி​யல் கட்​சி​யினர், திரைப்​பிரபலங்​கள் அஞ்​சலி செலுத்​தினர்.

முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் வெளி​யிட்ட இரங்​கல் செய்​தி​யில், “தே​மு​திக பொதுச்​செய​லா​ளர் சகோ​தரி பிரேமலதா விஜய​காந்த் தாயார் அம்​சவேணி மறைவெய்​திய செய்​தி​யறிந்து மிக​வும் வருந்​தினேன். பெற்​றெடுத்து அன்பு செலுத்தி வளர்த்த அன்​னையை இழந்​து​வாடும் பிரேமலதா விஜய​காந்​துக்கு எனது ஆழ்ந்த இரங்​கல்” என தெரி​வித்​தார்.

பிரேமல​தா​வின் தாயார் மறைவுக்​கு, பாமக நிறு​வனர் ராம​தாஸ், பாமக தலை​வர் அன்​புமணி, தமிழக காங்​கிரஸ் தலை​வர் செல்​வப்​பெருந்​தகை, அமமுக பொதுச்​செய​லா​ளர் டிடி​வி.​தினகரன், தமாகா தலை​வர் ஜி.கே.​வாசன், தமிழக பாஜக முன்​னாள் தலை​வர் அண்​ணா​மலை, தமிழக காங்​கிரஸ் முன்​னாள் தலை​வர் திரு​நாவுக்​கரசர், இந்​திய யூனியன் முஸ்​லிம் லீக் தலை​வர் காதர் மொகிதீன், மக்​கள் நீதி மய்​யம் தலை​வர் கமல்​ஹாசன்​ ஆகியோர்​ இரங்​கல் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x