Published : 08 Oct 2025 06:20 AM
Last Updated : 08 Oct 2025 06:20 AM

உயர் நீதிமன்றம் எதிரே வழக்கறிஞர் மீது விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தாக்குதல்: வீடியோ வைரல்

அதிமுக முன்னாள் வட்டச் செயலாளரும் வழக்கறிஞருமான ராஜீவ்காந்தி மீது விசிக-வினர் சரமாரியாக தாக்கினர்

சென்னை: உயர் நீதி​மன்​றம் எதிரே இருசக்கர வாக​னத்​தில் சென்ற வழக்​கறிஞர் மீது விசிக-​வினர் சரமாரி​யாக தாக்​குதல் நடத்தினர். இரு தினங்​களுக்கு முன்​னர், வழக்கு விசா​ரணை​யின்​போது, உச்ச நீதி​மன்ற தலைமை நீதிபதி பி.ஆர்​.க​வாய் மீது காலணி வீச முயற்சி நடந்​தது.

இது தொடர்​பாக வழக்​கஞர் ராகேஷ் கிஷோர் சஸ்​பெண்ட் செய்​யப்​பட்​டார். அவர் மீது வன்​கொடுமை தடுப்​புச் சட்​டம் உள்​ளிட்ட பிரிவு​களின் கீழ் நடவடிக்கை எடுக்க வலி​யுறுத்​தி, சென்னை உயர் நீதி​மன்​றம் அருகே வழக்​கறிஞர்​கள் நேற்று ஆர்ப்​பாட்​டம் நடத்தினர்.

இதில் விசிக தலை​வர் திரு​மாவளவன் பங்​கேற்​றார். பின்​னர், மதி​யம் 2.30 மணி அளவில் உயர் நீதி​மன்​றம் எதிரே (பார்​க​வுன்​சில் முன்​பு) என்​.எஸ்​.சி. போஸ் சாலை வழி​யாக காரில் சென்று கொண்​டிருந்​தார். அப்​போது, அந்த வழி​யாக சென்று கொண்​டிருந்த ஸ்கூட்டர் மீது திரு​மாவளவன் சென்ற கார் மோது​வது​போல் சென்​றுள்​ளது.

இதையடுத்​து, இருசக்கர வாக​னத்​தில் சென்ற நபர், அவரது வாக​னத்தை சாலை​யோரம் நிறுத்​தி​விட்​டு, மோது​வது​போல் வந்த வாக​னத்​தில் இருந்​தவர்​களிடம் ஏன் இப்​படி காரை அஜாக்​கிரதை​யாக ஓட்டி வரு​கிறீர்​கள் என கண்​டித்​துள்​ளார். இதையடுத்​து, திரு​மாவளவனின் காரிலிருந்து இறங்​கிய விசிக-​வினர், அவரிடம் வாக்​கு​வாதம் செய்​ததோடு சரமாரி​யாக தாக்​கினர். அவர்​களிட​மிருந்து தப்ப முயன்​ற ​போது விரட்டிச் சென்று தாக்​கினர்.

மேலும், அவரது இருசக்கர வாக​னத்தை வேக​மாக பிடித்து சாலை​யில் தள்ளினர். இதனால், அங்கு பதற்​ற​மான சூழல் ஏற்​பட்​டது. இதையடுத்​து, இருசக்கர வாக​னத்​தில் வந்த நபரை போலீ​ஸார் காவல் நிலை​யத்​துக்கு அழைத்​துச் சென்​றனர். விசா​ரணை​யில், இருசக்கர வாக​னத்தை ஓட்டி வந்​தது அதி​முக முன்​னாள் வட்​டச் செய​லா​ள​ரும், வழக்​கறிஞரு​மான நந்​தம்​பாக்​கத்தை சேர்ந்த ராஜீவ்​காந்தி என்​பது தெரிய​வந்​தது.

அவர் தன் மீது நடத்​தப்​பட்ட தாக்​குதல் தொடர்​பாக விசிக-​வினர் மீது எஸ்​பிளனேடு காவல் நிலை​யத்​தில் புகார் தெரி​வித்​தார். அதில், ``வேண்​டும் என்றே எனது வாக​னத்​தில் இடிப்​பது​போல் வேக​மாக வந்து விட்டு என் மீதே தாக்​குதல் நடத்​தி​ய​வர்​கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்​டும்'’ என தெரி​வித்​திருந்​தார்.

இதே​போல், விசிக தரப்​பிலும் வுழக்​கறிஞர் ராஜீவ்​காந்தி மீது புகார் அளிக்​கப்​பட்​டது. அதில், ``திரு​மாவளவன் வாக​னத்தை திட்​ட​மிட்டு வழிமறித்து தாக்க வேண்​டும் என்ற எண்​ணத்​துடன் மோது​வது​போல் இருசக்கர வாக​னத்​தில் வந்த நபரை தடுத்து நிறுத்​தினேன். அந்த நபரின் நோக்​கம் எங்​கள் தலை​வரை தாக்க வேண்​டும் என்​பது​தான்.

எனவே, சம்​பந்​தப்​பட்ட அந்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்​டும்'' என புகாரில் தெரி​வித்​திருந்​தனர். மேலும், அந்த நபரை கைது செய்ய கோரி மறியல் போராட்​டத்​தி​லும் ஈடு​பட்​டனர். இந்த இரு புகார்​கள் மீதும் போலீ​ஸார் வி​சா​ரணை மேற்​கொண்​டுள்​ளனர். இது ஒரு​புறம் இருக்​க வழக்கறிஞர் ராஜீவ்​காந்​தி​யை விடுதலை சிறுத்தைகள் கட்சியினர்​ தாக்​கும்​ வீடியோ காட்​சி சமூக வலைதளங்​களில்​ வைரலானது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x