Published : 08 Oct 2025 06:04 AM
Last Updated : 08 Oct 2025 06:04 AM

கரூர் மாவட்ட எஸ்.பி.யை சஸ்பெண்ட் செய்ய வேண்டும்: ஹெச்.ராஜா வலியுறுத்தல்

கும்பகோணம்: கரூர் சம்​பவத்​தில் உரிய நடவடிக்கை எடுக்​காத மாவட்ட காவல் கண்காணிப்பாளரை சஸ்​பெண்ட் செய்ய வேண்டும் என்று பாஜக மூத்த தலை​வர் ஹெச்​.​ராஜா கூறி​னார்.

கும்​பகோணம் அரு​கே​யுள்ள சுவாமிமலை​யில் செய்​தி​யாளர்​களிடம் அவர் நேற்று கூறிய​தாவது: விஸ்வ இந்து பரிஷத் நடத்​திய முருக பக்​தர்​கள் மாநாட்​டில் நிறைவேற்​றிய தீர்​மானத்​தின்​படி, வரும் 25, 26, 27-ம் தேதி​களில் ஒரே நேரத்​தில் பல லட்​சம் பேர் கந்த சஷ்டி கவசம் படிக்​கும் நிகழ்ச்சி நடை​பெறும்.

கள்​ளக்​குறிச்​சி​யில் கள்​ளச்​சா​ரா​யம் குடித்து 60 பேர் உயி​ரிழந்​த​ போது செல்​லாத முதல்​வர் ஸ்டா​லின், கரூருக்கு விரைந்து சென்று பாதிக்​கப்​பட்​ட​வர்​களை சந்​தித்​தார் என்​றால், அதற்கு காரணம் அரசி​யல்​தான். கரூர் மாவட்ட எஸ்​.பி. திமுக​காரர்​போல செயல்​படு​கிறார். கரூர் சம்​பவத்​தில் உரிய நடவடிக்கை எடுக்​காத எஸ்​.பி.யை உடனே சஸ்​பெண்ட் செய்ய வேண்​டும்.

அதே​போல, கரூர் மாவட்ட ஆட்​சி​யர் மீதும் நடவடிக்கை மேற்​கொள்ள வேண்​டும். அரசு கடமை தவறிய​தால் 41 பேர் உயி​ரிழந்​தனர். நிர்​வாகத் தோல்​வியை திசை திருப்​பவே, தமிழக முதல்​வர் கரூர் விரைந்து சென்று பாதிக்​கப்​பட்​ட​வர்​களைப் பார்த்​துள்​ளார். விபத்து நடந்த அன்று விஜய் கரூரிலேயே தங்கி இருந்​தால், தமிழக முதல்​வர் அங்கு செல்ல துணிச்​சல் இருந்​திருக்​காது. இவ்​வாறு அவர் கூறி​னார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x