Published : 08 Oct 2025 05:41 AM
Last Updated : 08 Oct 2025 05:41 AM

கரூரில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு வீடியோகால் மூலம் விஜய் ஆறுதல்: விரைவில் நேரில் வருவதாக உறுதி

கரூர்: கரூரில் தவெக பிரச்​சா​ரக் கூட்​டத்​தில் உயி​ரிழந்​தோரின் குடும்​பத்​தா​ரிடம் கட்​சித் தலை​வர் விஜய் வீடியோ​கால் மூலம் பேசி​யுள்​ளார். மேலும், விரை​வில் கரூர் வரு​வ​தாக அவர் தெரி​வித்​த​தாக பாதிக்​கப்​பட்ட குடும்​பத்​தினர் தெரி​வித்​தனர். கரூர் வேலு​சாமிபுரத்​தில் செப். 27-ல் நடை​பெற்ற தவெக பிரச்​சா​ரக் கூட்​டத்​தில் நெரிசலில் சிக்கி 41 பேர் உயி​ரிழந்​தனர்.

முதல்​வர் ஸ்டா​லின் மற்​றும் அரசி​யல் கட்​சித் தலை​வர்​கள் கரூர் வந்​து, உயி​ரிழந்​தவர்​களின் உடல்​களுக்கு அஞ்​சலி செலுத்​திய நிலை​யில், தவெக தலை​வர் விஜய் மட்​டும் கரூர் செல்​லாதது கடுமை​யாக விமர்​சிக்​கப்​பட்​டது.

இது தொடர்​பான வழக்​கு​கள் நீதி​மன்​றத்​தில் விசா​ரணைக்கு வந்​த​போது, விஜய்​யும், அவரது கட்​சி​யினரும் தொண்​டர்​களை நிராதர​வாக விட்​டு​விட்டு ஓடி​விட்​ட​தாக நீதிபதி குற்​றம்​சாட்​டி​னார். இதையடுத்​து, கடந்த 3, 4-ம் தேதி​களில் உள்​ளூர் தவெக நிர்​வாகி​கள் உயி​ரிழந்​தவர்​கள் குடும்​பத்​தினரை சந்​தித்து ஆறு​தல் கூறினர்.

இந்​நிலை​யில், தவெக கொள்கை பரப்பு செய​லா​ளர் அருண்​தாஸ் தலை​மையி​லான கட்​சி​யினர் நேற்று முன்​தினம் கரூர் வந்​தனர். அவர்​கள் உயி​ரிழந்த குடும்​பத்​தினரை சந்​தித்​து, செல்​போன் மூலம் வீடியோ​காலில் அழைத்து பாதிக்​கப்​பட்ட குடும்​பத்​தினரிடம் விஜய்யை பேச வைத்​தனர்.

தொடர்ந்​து, 2-வது நாளாக நேற்​றும் வீடியோ​கால் மூலம் விஜய் ஆறு​தல் தெரி​வித்​தார். கரூர் தெற்கு காந்தி கிராமத்​தை சேர்ந்த தனுஷ்கு​மாரின் (24) தங்கை ஹர்​ஷினி​யிடம் ​ பேசிய விஜய், “அண்​ணன் இருக்​கிறேன்.

உங்களை பார்க்க சீக்​கிரமா வர்​றேன்” என்று கூறியுள்​ளார். ஏமூர்​புதூரில் மனைவி பிரியதர்​ஷினி, மகள் தரணி​காவை இழந்த டாஸ்​மாக் ஊழியர் சக்​திவேலிடம் வீடியோ​காலில் பேசிய விஜய், “இந்த சம்​பவம் ஈடு​செய்ய முடி​யாத இழப்​பு, துக்​கம் தாங்க முடிய​வில்​லை. விரை​வில் சந்​திக்​கிறேன்” என்று பேசி​யுள்​ளார். இதே​போல, கரூரில் உயி​ரிழந்த 20-க்​கும் மேற்​பட்​ட​வர்​களின் குடும்​பத்​தினரிடம் விஜய் பேசி​யுள்​ளார்.

அப்​போது, வீடியோ காலில் பேசுவதை யாரும் புகைப்​படம் எடுக்க வேண்​டாம் என்று விஜய் கேட்​டுக் கொண்​ட​தாக நிர்​வாகி​கள் தெரி​வித்​தனர். இன்று மேலும் பாதிக்​கப்​பட்ட சில குடும்​பத்​தினரிடம் விஜய் பேச உள்​ள​தாக கூறப்​படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x