Published : 07 Oct 2025 05:30 AM
Last Updated : 07 Oct 2025 05:30 AM

தொல்லியல் துறை முன்னாள் இயக்குநர் நடன.காசிநாதன் காலமானார்: அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல்

சென்னை: முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் வெளி​யிட்ட இரங்​கல் செய்​தி​: தமிழக தொல்​லியல் துறை​யின் முன்​னாள் இயக்​குநர் நடன.​காசி​நாதன் மறைந்த செய்​தி​யறிந்து மிக​வும் வேதனை அடைந்​தேன். காசி​நாதன் பல்​வேறு கல்​வெட்​டுகள், செப்​புப் பட்​ட​யங்​கள், பழமை​யான சிற்​பங்​கள், நடு​கற்​களை கண்​டு​பிடித்த பெரு​மைக்​குரிய​வர். தமிழரின் தொன்​மையை நிலை ​நாட்ட பூம்​பு​கார் ஆழ்​கடலாய்வு உள்​ளிட்ட பல ஆய்​வு​களைச் செய்​தவர்.

காசி​நாதன் தமிழகம் முழு​வதும் வரலாற்​றுக் கருத்​தரங்​கு​களை​யும், கல்​வெட்​டுப் பயிற்சி வகுப்​பு​களை​யும் நடத்தி பல இளைஞர்​களும் இத்​துறை​யில் ஆர்​வம் பெற உழைத்​துள்​ளார். இதுத​விர, கல்​லெழுத்​துக் கலை, சோழர் செப்​பேடு​கள், தமிழர் காசு இயல், ராச​ராசேச்​சுரம் உட்பட பல்​வேறு நூல்​களை எழு​தி​யதுடன், பல நூல்​களை பதிப்​பித்​து, தொல்​லியல் துறைக்கு பெரும் பங்​களிப்பை ஆற்றி​யுள்​ளார்.

இவரது அளப்​பரிய பங்​களிப்​பு​களுக்கு அங்​கீ​கார​மாக, தமிழக அரசின் உ.வே.​சா. விருது, சிறந்த நூல் விருது உட்பட பல விருதுகளை பெற்​றார். அவரை இழந்து வாடும் குடும்​பத்​தார், அறிஞர்​கள், மாணவர்​கள் உள்​ளிட்ட அனை​வருக்​கும் எனது ஆழ்ந்த இரங்​கலைத் தெரி​வித்​துக் கொள்​கிறேன் என்றார். பாமக தலை​வர் அன்​புமணியும் நடன.​காசி​நாதன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x