Published : 07 Oct 2025 05:47 AM
Last Updated : 07 Oct 2025 05:47 AM

கடலோர பகுதிகளில் மீட்பு, மாசு தடுப்பு பணியில் ட்ரோன்கள் பயன்பாட்டை அதிகரிக்க நடவடிக்கை

இந்திய கடலோர காவல் படை சார்பில், தேசிய கடல்சார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த ஒத்திகை நிகழ்ச்சி சென்னை அருகே நடுக்கடலில் நேற்று நடைபெற்றது. இதில் எண்ணெய் கசிவால் உருவாகும் மாசுபாட்டை எவ்வாறு தடுப்பது, தண்ணீரில் விழுந்தவர்களை ஹெலிகாப்டர் உதவியுடன் காப்பாற்றுவது, தீ விபத்தில் சிக்கிய கப்பலை தண்ணீர் கொண்டு அணைப்பது உள்ளிட்ட ஒத்திகைகள் செய்து காண்பிக்கப்பட்டது. | படங்கள்: எஸ்.சத்தியசீலன் |

சென்னை: தேசிய மாசு தடுப்பு தினத்தை முன்​னிட்​டு, கடலோர காவல்​படை 2 ஆண்​டு​களுக்கு ஒரு​முறை நடுக்​கடலில் ஒத்​திகை பயிற்​சி​யில் ஈடு​பட்டு வரு​கிறது. அதன்​படி, மாசு தடுப்பு ஒத்​திகை சென்னை அருகே சுமார் 20 கிமீ தொலை​வில் கடல் பகுதியில் கடலோர காவல்​படை வீரர்​கள் நேற்று பயிற்​சி​யில் ஈடு​பட்​டனர்.

இதில் கப்​பலில் தீ விபத்து ஏற்​பட்​டால், கடலோர காவல் படை கப்​பல்​கள் விரைந்து சென்று தீயை அணைப்​பது, அதி​லுள்ள பணியாளர்​களை ஹெலி​காப்​டர்​கள் மூலம் மீட்​பது, கடலில் தத்​தளிக்​கும் பணி​யாளர்​களுக்கு விமானம் மூல​மாக மிதவை உபகரணங்​களை போடு​வது, இரவு நேரங்​களில் பிரத்​தி​யேக ஒளி விளக்கை வானில் ஏவி, பிறர் உதவியை கோரு​வது, கடலில் எண்​ணெய் கசிவு ஏற்​பட்​டால், டார்​னியர் விமானம் மூல​மாக கண்​டறிவது, சிறப்பு மாசு தடுப்பு கப்​பல்​கள் மூலம் மிதவை​கள் மூல​மாக கடலில் எண்​ணெய் பரவாமல் தடுப்​பது, அவற்றை ஸ்கிம்​மர்​கள் மூலமாக உறிஞ்​சுவது, கடலில் தத்​தளிப்​பவரை, ரிமோட் கண்ட்​ரோல் மூலம் இயக்​கப்​படும் மிதவையை கொண்டு சென்று மீட்​பது உள்​ளிட்ட ஒத்​திகை பயிற்​சிகள் மேற்​கொள்​ளப்​பட்​டன.

பின்​னர், இந்​திய கடலோர காவல்​படை தலை​வர் பரமேஷ் சிவ​மணி செய்​தி​யாளர்​களிடம் கூறுகை​யில், “கடலோர காவல்​படை​யில் தற்​போது 154 கப்​பல்​கள், 78 விமானம் மற்​றும் ஹெலி​காப்​டர்​கள் உள்​ளன. இப்​படை, எண்​ணெய் கசிவை எதிர்​கொள்​வ​தில் சிறப்​பாக பணி​யாற்றி வரு​கிறது. உலக அளவில் கடலோர மாசு தடுப்பு பணி​களில் பயன்​படுத்​தப்​படும் நவீன தொழில்​நுட்​பங்​கள், உத்​தி​கள் இந்​திய கடலோர காவல்​படை​யில் செயல்​படுத்​தப்​படு​கிறது.

இந்த ஆண்டு ஒத்​தி​கை​யில் முதன்​முறை​யாக ட்ரோனை பயன்​படுத்​தி, கடலில் தத்​தளிப்போருக்கு மிதவை உபகரணத்தை கொண்​டு​போய் சேர்த்​திருக்​கிறோம். கடலோர பகு​தி​களில் மீட்பு, மாசு தடுப்பு பணி​களில் ட்ரோன்​கள் பயன்​பாட்டை அதி​கரிக்க நடவடிக்கை எடுக்​கப்​படும்” என்​றார். அப்​போது, கடலோர காவல்​படை ஏடிஜிபிடோனி மைக்​கேல், கிழக்கு பிராந்​திய கடலோர காவல்​படை தலை​வர் டட்​விந்​தர் சிங் சைனி உள்​ளிட்​டோர் உடனிருந்​தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x