Published : 07 Oct 2025 05:39 AM
Last Updated : 07 Oct 2025 05:39 AM

தலைமைச் செயலக ஊழியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து பணி

சென்னை: அரசு ஊழியர்​களுக்கு பழைய ஓய்​வூ​திய திட்​டம், ஒருங்​கிணைந்த ஓய்​வூ​திய திட்​டம், பங்​களிப்பு ஓய்​வூ​திய திட்​டம் குறித்து ஆய்வு செய்​வதற்​காக, மூத்த ஐஏஎஸ் அதி​காரி ககன்​தீப் சிங் பேடி தலை​மை​யில், தமிழக அரசு ஓய்​வூ​தி​யக் குழுவை அமைத்​தது. அக்​குழு செப்​. 30-ம் தேதி தனது அறிக்​கையை சமர்ப்​பிக்​கும் என அறிவிக்​கப்​பட்​டிருந்​தது. ஆனால், அத்​தே​தி​யில் இடைக்​கால அறிக்​கை​யையே சமர்ப்​பித்​தது.

இந்​நிலை​யில், ஓய்​வூ​தி​யக் குழு அளித்த இடைக்​கால அறிக்​கைக்கு எதிர்ப்பு தெரிவிக்​கும் வகை​யில், தலை​மைச் செயலக ஊழியர்​கள் அக்​.6-ம் தேதி அன்று கருப்பு பேட்ஜ் அணிந்து பணி​யாற்​று​வர் என்று தலை​மைச் செயலக சங்​கம் அறி​வித்​திருந்​தது.

அதன்​படி, தலை​மைச் செயல​கத்​தில் நேற்று ஊழியர்​கள் அனை​வரும் கருப்பு பேட்ஜ் அணிந்து பணி​யில் ஈடு​பட்​டனர். இதில், அனைத்து வகை அலு​வலர்​கள், பணி​யாளர்​கள் என 3 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்​டோர் பங்​கேற்​ற​தாக தலை​மைச் செயலக சங்க தலை​வர் கு.வெங்​கடேசன் தெரி​வித்​தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x