Last Updated : 07 Oct, 2025 05:43 AM

 

Published : 07 Oct 2025 05:43 AM
Last Updated : 07 Oct 2025 05:43 AM

ஐயப்பனை தரிசிக்க சபரிமலைக்கு குடியரசு தலைவர் முர்மு அக்.22-ல் வருகை

குமுளி: குடியரசு தலை​வர் திரவுபதி முர்மு ஐயப்​பனை தரிசிப்ப​தற்​காக அக். 22-ம் தேதி சபரிமலை வரு​கிறார். இதற்​கான பாதுகாப்பு ஏற்​பாடு​கள் முழு​வீச்​சில் செய்​யப்​பட்டு வரு​கின்​றன. சபரிமலை ஐயப்​பன் கோயி​லில் வரும் 18-ம் தேதி துலாம் மாத (ஐப்பசி) பிறப்பை முன்​னிட்டு வரும் 17-ம் தேதி மாலை நடை திறக்​கப்பட உள்​ளது.

ஐப்​பசி மாத வழி​பாட்​டில் குடியரசு தலை​வர் திர​வுபதி முர்மு கலந்​து​கொண்டு ஐயப்​பனை தரிசிக்க உள்​ளார். இவர் ஏற்​கெனவே மே மாதம் சபரிமலைக்கு வரு​வ​தாக இருந்த நிலை​யில், பம்​பை, சந்​நி​தானம் உள்​ளிட்ட பகு​தி​கள் ராணுவ கட்​டுப்​பாட்​டுக்​குள் கொண்​டு​வரப்​பட்​டன. ஆனால் அப்​போது நடை​பெற்ற இந்​தி​ய-​பாகிஸ்​தான் போர்​சூழலால் அவர் சபரிமலைக்கு வர முடி​யாத நிலை ஏற்பட்டது.

இந்​நிலை​யில் இந்த மாதம் அவர் வர உள்​ள​தாக தேவசம் போர்டு அதி​காரி​கள் தெரி​வித்​தனர். இதுகுறித்து தேவசம் போர்டு அமைச்சர் வி.என்​.​வாசன் கூறும்போது, குடியரசு தலை​வர் திர​வுபதி முர்மு சபரிமலைக்கு வர உள்​ளார். வரும் 22-ம் தேதி கொச்சி விமான நிலையத்​துக்கு வந்​து, அங்​கிருந்து ஹெலி​காப்​டர் மூலம் நிலக்​கல் வரு​கிறார். தொடர்ந்து கார் மூலம் பம்பை வந்து அங்கிருந்து நீலிமலை பாதை வழியே நடந்து செல்ல உள்​ளார். இருப்​பினும் மாற்று ஏற்​பா​டாக வாக​னம் மூலம் சந்​நி​தானம் செல்லவும் ஏற்​பாடு​கள் செய்​யப்​பட்​டுள்​ளன, என்​றார்.

பக்தர்களிடையே குழப்பம்: இதற்கிடையே பாது​காப்பு கருதி அவர் வருகை குறித்த முழு விவர​மும் தேவசம் போர்டுக்கு வரவில்லை. குடியரசு தலைவர் வரும் நாளில் பாது​காப்பு காரணங்​களுக்​காக பக்​தர்​களின் வருகையை கட்​டுப்​படுத்த திட்டமிடப்பட்​டுள்​ளது. ஆனால் வரும்17-ம் தேதி மட்​டுமே பக்​தர்​களின் தரிசனத்​துக்​காக அனு​மதி அளிக்​கப்​பட்​டுள்​ளது. இதனால் அடுத்​தடுத்த நாட்​களில் தரிசன முன்​ப​திவுகளை மேற்​கொள்​வ​தில் பக்​தர்​களிடையே குழப்​பம் ஏற்​பட்​டுள்​ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x