Published : 06 Oct 2025 06:31 AM
Last Updated : 06 Oct 2025 06:31 AM
சென்னை: திராவிடர் கழகத்தின் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாடு, செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகரில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில், திமுக துணை பொதுச்செயலாளரும், எம்.பி.யுமான ஆ.ராசா பேசும்போது, “பொதுவுடைமை இயக்கத்தினர் ஒரு காலத்தில் பெரியாரை எதிர்த்தனர். ஆனால், இந்த மேடையில் பெரியார்தான் தேவை என்று அக்கட்சியினர் சொல்கின்றனர்” என்று பேசினார்.
இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் பேசும்போது, “நாங்கள் கருத்தால் முரண்பட்டது உண்மை. ஆனால் பெரியாருக்கு தீங்கு செய்யவில்லை. துரோகம் செய்யவில்லை. நாங்கள் இங்கு வந்து மேடையில் அமர்ந்திருக்கிறோம் என்றால் பெரியார் எங்களுக்கு தேவைப்படுகிறார், நிரப்பிக் கொள்கிறோம்.
ஆனால் பெரியார் வந்து சேர்ந்த இடம் கம்யூனிஸம், சமத்துவம் என்பதை ஆ.ராசாவுக்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன். திராவிட இயக்கம், கம்யூனிஸ்ட் இயக்கம் இரண்டின் இலக்கும் சமதர்மம், சமத்துவம்தான். எதிரி ஆர்எஸ்எஸ், பாஜக. அதிலிருந்து இடறிவிடக்கூடாது என்பதுதான் என் வேண்டுகோள்” என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT