Published : 06 Oct 2025 06:05 AM
Last Updated : 06 Oct 2025 06:05 AM

போக்குவரத்து ஊழியர்களுக்கு தீபாவளி முன்பணம் வழங்க ரூ.152 கோடி ஒதுக்கீடு

சென்னை: போக்​கு​வரத்​து துறை செயலர் சுன்​சோங்​கம் ஜடக் சிரு, தமிழ்​நாடு போக்​கு​வரத்​துக் கழக வளர்ச்சி நிதி நிறுவன மேலாண் இயக்​குநருக்கு அனுப்​பிய கடிதத்​தில் கூறி​யிருப்​ப​தாவது: போக்​கு​வரத்​துக் கழக ஊழியர்​களுக்கு பண்​டிகை கால முன்​பணம் வழங்​கும் வகை​யில் ரூ.152.28 கோடியை கடனாக வழங்​கு​மாறு போக்​கு​வரத்​துத் துறை தலை​வர் அலு​வல​கம் கோரி​யுள்​ளது.

அதன்​படி, மாநகர போக்​கு​வரத்​துக் கழகம், விரைவு போக்​கு​வரத்​துக் கழகம், விழுப்​புரம், சேலம், கோவை, கும்​பகோணம், மதுரை, நெல்லை போக்​கு​வரத்​துக் கழகங்​களுக்கு தலா ரூ.11.94 கோடி, ரூ.7.35 கோடி, ரூ.22 கோடி, ரூ.12.08 கோடி, ரூ.28.30 கோடி, ரூ.33.91 கோடி, ரூ.23.08 கோடி, ரூ.13.62 கோடியை ஒதுக்​கீடு செய்ய வேண்​டும்.

இந்​த தொகையை போக்​கு​வரத்​துக் கழகங்​கள் மூலம் கடனாக விநியோகித்​து​விட்​டு, விதி​களின்​படி சமமான தவணை​கள் மூலம் திரும்​ப பெற்​றுக் கொள்​ளலாம். இவ்​வாறு அதில் கூறப்​பட்​டுள்​ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x