Published : 06 Oct 2025 12:24 AM
Last Updated : 06 Oct 2025 12:24 AM
சென்னை: ஸ்பெயினில் நடைபெற்ற கார் பந்தயத்தில் 3-வது இடம் பிடித்த நடிகர் அஜித்குமார் அணிக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.
ஸ்பெயினில் ஐரோப்பிய எண்டூரன்ஸ் சாம்பியன்ஷிப் தொடர் கார் பந்தயத்தில் அஜித் அணி ஒட்டுமொத்தமாக 3-வது இடம் பிடித்து சாதனை படைத்துள்ளது. இதையொட்டி, அவருக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது சமூக வலைதள பதிவில் கூறியுள்ளதாவது: பார்சிலோனாவில் நடந்த 24 மணி நேர கார் பந்தயத்தில் நடிகர் அஜித்குமாரின் அணி ஒட்டுமொத்தமாக 3-வது இடம் பிடித்திருப்பதை அறிந்து மகிழ்கிறேன். இந்த வெற்றியின் மூலம் உலக அளவில் கார் பந்தயத்தில் இந்தியாவையும், தமிழகத்தையும் பெருமையடைய செய்த நடிகர் அஜித்குமாருக்கும், அவரது குழுவினருக்கும் வாழ்த்துகள்.
மேலும், இந்த சர்வதேசப் போட்டியின்போது, கார், பந்தய உபகரணங்கள், ஜெர்சியில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் இலச்சினையை பயன்படுத்தியதற்காக தமிழக அரசு சார்பில் அவருக்கும், அவரது குழுவினருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அவரது அணி இன்னும் பல வெற்றிகளை குவிக்கட்டும்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT