Published : 05 Oct 2025 10:53 AM
Last Updated : 05 Oct 2025 10:53 AM
சென்னை: ‘தவெக தலைவர் விஜய்யை அரசியலில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்று சிலர் காழ்ப்புணர்ச்சியோடு செயல்படுகிறார்கள்’ என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் கடந்த 30 ஆண்டுகளாக, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் மட்டுமே பன்னாட்டு நிறுவனங்கள் அமைகின்றன. இதனால், தென் மாவட்டங்களில் இளைஞர்கள் வேலைவாய்ப்பு இல்லாமல், வாழ்வாதாரம் பாதிக் கப்படுகிறார்கள். இந்த மாவட்டங்களில் தொழிற்சாலைகள் தொடங்க தொடர்ந்து குரல்
கொடுத்து வந்தோம். தற்போது, தூத்துக்குடியில் தொடங்கப்பட்டுள்ள கார் கம்பெனிகளில் 300-க்கும் மேற்பட்டோர் வேலையில் அமர்ந்துள்ளனர். ஆனால், இந்த வேலையில் உள்ளூர் வாசிகள் மிகக் குறைவு.
அதேபோல் கட்டுமான நிறுவனங்களிலும் ஆந்திரா, மகாராஷ்டிரா போன்ற வெளிமாநிலங்களில் இருந்து ஆட்கள் வேலையில் அமர்த்தப்படுகிறார்கள். அவற்றில் உள்ளூர் மக்களுக்கு முன்னுரிமை அளிக்க சட்டமியற்ற வேண்டும். இவற்றை முன்வைத்து, அக்.16-ம் தேதி தூத்துக்குடியில் பிரம்மாண்ட ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம். அதைத்தொடர்ந்து, போதுமான மருத்துவ வசதி ஏற்படுத்தக் கோரி விருதுநகரில் அக்.18-ம் தேதி போராட்டம் நடத்தப்படும்.
வீட்டில் முடங்கக்கூடாது: கரூரில் தவெக தலைவர் விஜய் பிரச்சாரத்தின்போது 41 பேர் உயிரிழந்தது தமிழகத்தை உலுக்கி உள்ளது. இதை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. இந்த நிகழ்வைப் பார்க்கும் போது, திட்டமிட்டு செய்து வருவதாகத் தெரிகிறது. ஆனால், இதை விஜய் செய்ததுபோல குற்றம்சாட்டப்படுகிறது, விஜய் யைக் கைது செய்ய வேண்டும் என்று சிலர் கூறுகின்றனர்.
இதுநடந்தது ஏப்படி என்பதை ஜனநாயகரீதியாக கண்டுபிடிக்க வேண்டுமே தவிர, அவரை அரசிய லில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்ற காழ்ப்புணர்ச்சியோடு செயல்படக் கூடாது. விஜய் வீட்டிலேயே முடங்காமல், வெளியே வரவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT