Published : 05 Oct 2025 10:40 AM
Last Updated : 05 Oct 2025 10:40 AM

அண்ணாமலை திடீர் டெல்லி பயணம்

சென்னை: மாநில பாஜக முன்​னாள் தலை​வர் அண்​ணா​மலை திடீர் பயண​மாக கோவை​யில் இருந்து டெல்லி புறப்​பட்​டுச் சென்​றார்.

கரூரில் நெரிசலில் சிக்கி 41 பேர் உயி​ரிழந்த சம்​பவம் தொடர்​பாக, பாதிக்​கப்​பட்​ட​வர்​களை சந்​தித்து பாஜக முன்​னாள் மாநில தலை​வர் அண்​ணா​மலை ஆறு​தல் கூறியதுடன் சம்பவ இடத்​தை​யும் பார்​வை​யிட்​டார்.

கரூருக்கு வந்த பாஜக எம்​.பி.க்​கள் விசா​ரணை குழு​வுட​னும் அண்​ணா​மலை சென்று ஆய்வு மேற்​கொண்​டார். இந்த நிலை​யில் திடீரென நேற்று கோவை​யில் இருந்து விமானத்​தில் டெல்லி புறப்​பட்​டுச் சென்​றார். அங்கு அவர், அமித் ஷா மற்​றும் பாஜக தேசிய அமைப்பு பொதுச்​செய​லா​ளர் பி.எல்​.சந்​தோஷ் ஆகியோரைச் சந்​திக்க திட்​ட​மிட்​டுள்​ள​தாகத் தெரி​கிறது.

அப்​போது தமிழக அரசி​யல் சூழ்​நிலை குறித்து ஆலோ​சிக்​க இருப்​ப​தாகக்​ கூறப்​படு​கிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x