Published : 05 Oct 2025 10:21 AM
Last Updated : 05 Oct 2025 10:21 AM

பேரவைக் கூட்ட நாட்களை முடிவு செய்ய அலுவல் ஆய்வுக்குழு அக்.13-ம் தேதி கூடுகிறது

சென்னை: தமிழக சட்​டப்​பேரவை கூட்​டம் வரும் அக்​.14-ம் தேதி தொடங்க உள்ள நிலை​யில், பேர​வையை எத்​தனை நாட்​கள் நடத்​து​வது என்​பது குறித்த அலு​வல் ஆய்​வுக்​குழு கூட்​டம் அக்​.13-ம் தேதி நடை​பெறுகிறது.

தமிழக சட்​டப்​பேர​வை​யின் இந்​தாண்​டுக்​கான முதல் கூட்​டம் கடந்த ஜனவரி மாதம் 6-ம் தேதி தொடங்​கியது. ஆளுநர் உரை மீதான விவாதம் 4 நாட்​கள் நடை​பெற்​றன.

அதன்​பின், மார்ச் 14-ம் தேதி தமிழக அரசின் 2025-26-ம் நிதி​யாண்​டுக்​கான பட்​ஜெட், 15-ம் தேதி வேளாண் பட்​ஜெட் தாக்​கல் செய்​யப்​பட்​டது. இரு பட்​ஜெட்​கள் மீதான விவாதம் மார்ச் 17-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை நடை​பெற்​றது. தொடர்ந்து கடந்த மார்ச் 24-ம் தேதி துறைதோறும் மானிய கோரிக்கை விவாதம் தொடங்கி ஏப்​.29-ம் தேதி வரை நடை​பெற்​றது. இதையடுத்​து, ஏப்​.29-ம் தேதி பேரவை மீண்​டும் கூடும் தேதி குறிப்​பிடப்​ப​டா​மல் தள்​ளிவைக்​கப்​பட்​டது.

சட்​டப்​பேரவை விதி​களின்​படி, ஒரு பேரவைக் கூட்​டம் முடிவுற்​றால் அடுத்த கூட்​டம் 6 மாதங்​களில் நடை​பெற வேண்​டும். அதன் அடிப்​படை​யில், வரும் அக்​.14-ம் தேதி சட்​டப்​பேர​வைக் கூட்​டம் நடை​பெறும் என பேர​வைத் தலை​வர் மு.அப்​பாவு அறி​வித்​திருந்​தார். அன்​றைய நாள் முன்​னாள் உறுப்​பினர்​கள் மறைவுக்கு இரங்​கல் குறிப்பு வாசிக்​கப்​படு​கிறது. அதன்​படி, சமீபத்​தில் மறைந்த வால்​பாறை எம்​எல்ஏ அமுல் கந்​த​சாமி மற்​றும் பிரபலங்​கள் மறைவுக்கு இரங்​கல் தீர்​மானம் நிறைவேற்​றப்​பட்​டு, பேரவை தள்​ளிவைக்​கப்​படும். மேலும், கூடு​தல் செல​வினங்​களுக்​கான துணை மானிய கோரிக்கை தாக்​கல் செய்​யப்​படும் என்று பேர​வைத் தலை​வர் அறி​வித்​திருந்​தார்.

இந்​நிலை​யில், இந்த கூட்​டத் தொடரை எத்​தனை நாட்​கள் நடத்​து​வது என்​பது தொடர்​பான அலு​வல் ஆய்​வுக்​குழு கூட்​டம் வரும் அக்​.13-ம் தேதி பேர​வைத் தலை​வர் மு.அப்​பாவு தலை​மை​யில் நடை​பெறும் என தகவல் வெளி​யாகி​யுள்​ளது. இக்​கூட்​டத்​தில் எடுக்​கப்​படும் முடி​வின்​படி, பேர​வை நிகழ்​வு​கள்​ நடைபெறும்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x