Published : 05 Oct 2025 09:00 AM
Last Updated : 05 Oct 2025 09:00 AM

விஜய் வருத்தம் தெரிவிக்க வேண்டும்: சீமான் அறிவுறுத்தல்

தூத்துக்குடி: கரூர் சம்​பவத்​துக்கு பொறுப்​பேற்று விஜய் வருத்​தம் தெரிவிக்க வேண்​டும் என்று நாம் தமிழர் கட்​சி​யின் தலைமை ஒருங்​கிணைப்​பாளர் சீமான் கூறி​னார்.

திருச்​செந்​தூர் அமலி நகருக்கு நேற்று வந்த அவர், அங்​கிருந்து மீனவர்​களின் படகில் நடுக்​கடலுக்கு சென்று பார்​வை​யிட்​டார். பின்​னர் அவர் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது:

கடலை​யும், கடல் வாழ் உயி​ரினங்​களை​யும் பாது​காப்​பது தொடர்​பாக தூத்​துக்​குடி​யில் நவ.15-ல் ‘கடல் அம்மா மாநாடு’ நடத்​துகிறோம். இந்த மாநாட்​டுக்​கான ஆலோ​சனை பயணம்​தான் இது.

கரூர் சம்​பவத்​தின்​போது தவெக தலை​வர் விஜய்க்கு உரிய பாது​காப்பு இருந்​தது. ஆனால், மக்​களுக்​குத்​தான் பாது​காப்​பில்​லை. கரூர் சம்​பவம் தொடர்​பான நீதி​மன்​றத்​தின் உத்தர​வு​கள் குறித்து கருத்து கூற முடி​யாது. விஜய்யை காப்​பாற்ற வேண்​டுமென பாஜக நிலைப்பாடு எடுத்​துள்​ளது. விஜய்யை பார்க்க வந்த கூட்​டத்​தால்​தான் நெரிசல் ஏற்​பட்​டுள்​ளது. எனவே, நடந்த சம்​பவத்​துக்குப் பொறுப்​பேற்​று, விஜய்வருத்​தம் தெரிவிக்க வேண்டும். அதை விடுத்து அரசு, காவல் துறை மீது பழி​போட்​டு, தனக்கு எந்த சம்​பந்​த​மும் இல்லை என்று கூறு​வ​தால்​தான் சிக்​கல் ஏற்​படு​கிறது.

ஒரு​வர் மீது ஒருவர் மாறி மாறி பழி சுமத்​து​வது உயி​ரிழப்​பை​விட கொடுமை​யாக உள்​ளது. விஜய்யை கூட்​ட​ணிக்​குள் கொண்​டுவர பாஜக முயற்​சிக்​கிறது. அதேகூட்​ட​ணி​யில் உள்​ள​தால் அதி​முக​வும் விஜய்க்கு ஆதரவாக பேசுகிறது. நாம் தமிழர் கட்சி தனித்​து​தான் போட்​டி​யிடும். இவ்​வாறு அவர்​ கூறி​னார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x