Published : 05 Oct 2025 08:52 AM
Last Updated : 05 Oct 2025 08:52 AM

தேவை ஏற்பட்டால் விஜய் கைது செய்யப்படுவார்: அமைச்சர் துரைமுருகன் தகவல்

வேலூர்: கரூர் விவ​காரத்​தில் தேவை ஏற்​பட்​டால் விஜய் கைது செய்​யப்​படு​வார் என்று அமைச்​சர் துரை​முரு​கன் கூறி​னார்.

வேலூர் மாவட்​டம் காட்​பாடி அடுத்த சேர்க்​காடு பகு​தி​யில் செய்​தி​யாளர்​களிடம் அவர் நேற்று கூறிய​தாவது: கரூர் தவெக பிரச்​சா​ரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயி​ரிழந்த சம்​பவம் தொடர்​பான வழக்​கில் நீதிபதி பல்​வேறு உண்​மை​களை வெளிப்​படுத்​தி​யுள்​ளார்.

அதி​முக அனைத்து தொகு​தி​களி​லும் வெற்றி பெறும் என்று அக்​கட்​சி​யின் பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி கூறி​யுள்​ளார். சீமானை கேட்​டால், அவரும் 234 தொகு​தி​களி​லும் வெற்றி பெறு​வோம் என்று கூறு​வார். யார் வேண்​டு​மா​னால் சொல்​லலாம். ஆனால், தேர்​தல் நேரத்​தில்​தான் எல்​லாம் தெரி​யும்.

கள்​ளக்​குறிச்சி சம்​பவத்​துக்கு செல்​லாத முதல்​வர் ஸ்டா​லின் கரூருக்கு சென்​றது ஏன் என்​றும், விசா​ரணை ஆணை​யம் அமைத்​தது குறித்​தும் அண்​ணா​மலை கேள்வி எழுப்​பி​யுள்​ளார். எதிர்க்​கட்​சி​யினர் அப்​படித்​தான் பேசு​வார்​கள்.

கள்​ளக்​குறிச்சி சம்​பவம் நடந்​த​போது இருந்த சூழ்​நிலை வேறு, தற்​போதுள்ள சூழ்​நிலை வேறு. நெரிசலில் சிக்கி 41 பேர் உயி​ரிழந்​தது சாதாரண விஷய​மா? உலகமே இந்த சம்​பவத்தை பார்த்​துக் கொண்​டிருக்​கிறது. அதனால்​தான் முதல்​வர் உடனடி​யாக அங்கு சென்​றார்.

கரூர் விவ​காரத்​தில் தவெக தலை​வர் விஜய்யை கைது செய்​யும் நிலை வந்​தால், அவரைக் கைது செய்​வோம். தேவை​யில்​லாத சூழலில் அவரைக் கைது செய்ய மாட்​டோம். அநாவசி​ய​மாக அரசு யாரை​யும் கைது செய்​யாது. இவ்​வாறு துரை​முருகன் கூறி​னார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x