Published : 05 Oct 2025 08:32 AM
Last Updated : 05 Oct 2025 08:32 AM

கரூர் நெரிசல் உயிரிழப்பு: சிறப்பு புலனாய்வு குழுவிடம் ஆவணங்கள் ஒப்படைப்பு

கரூர்: கரூர் தவெக பிரச்​சார கூட்​டத்​தில் 41 பேர் உயி​ரிழந்த வழக்கு தொடர்​பான ஆவணங்​களை, வடக்கு மண்டல ஐ.ஜி. அஸ்ரா கார்க் தலை​மையி​லான சிறப்பு புல​னாய்​வுக் குழு​விடம் ஏடிஎஸ்பி பிரேம் ஆனந்​தன் நேற்று ஒப்​படைத்​தார்.

கரூர் வேலு​சாமிபுரத்​தில் கடந்த செப். 27-ம் தேதி நடந்த தவெக பிரச்​சார கூட்​டநெரிசலில் சிக்கி 41 பேர் உயி​ரிழந்​தனர். இது தொடர்​பாக விசா​ரணை நடத்த ஓய்​வு​பெற்ற உயர் நீதி​மன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலை​மை​யில் ஒரு நபர் விசா​ரணை ஆணை​யம் அமைக்​கப்​பட்​டது. அவர் சம்பவ இடத்தை பார்​வை​யிட்​டு, மருத்​து​வ​மனை​யில் சிகிச்சை பெறு​வோர் மற்​றும் உயி​ரிழந்​தோர் குடும்​பத்​தினரை சந்​தித்து விசா​ரணை நடத்​தி​னார்.

இவ்​வழக்​கில் முதலில் விசா​ரணை அதி​காரி​யாக கரூர் டிஎஸ்பி செல்​வ​ராஜ் நியமிக்​கப்​பட்​டிருந்​தார். பின்​னர் அவர் மாற்​றப்​பட்டு ஏடிஎஸ்பி பிரேம் ஆனந்​தன் நியமிக்​கப்​பட்​டார்.

இந்​நிலை​யில், இந்த வழக்கு தொடர்​பாக விசா​ரிக்க வடக்கு மண்டல ஐ.ஜி. அஸ்ரா கார்க் தலை​மை​யில், சிறப்பு புல​னாய்​வுக் குழுவை அமைத்து உயர் நீதி​மன்​றம் நேற்று முன்​தினம் உத்​தர​விட்​டது.

இந்​தக் குழு​வில் எஸ்​.பி.க்​கள் சியாமளா தேவி, விமலா ஆகியோர் இடம் பெற்​றுள்​ளனர். ஏடிஎஸ்​பி-க்​கள், டிஎஸ்​பி-க்​கள் உள்​ளிட்ட மேலும் சில அதி​காரி​கள் இந்த குழு​வில் சேர்க்​கப்பட உள்​ளனர்.

இதையடுத்​து, ஏடிஎஸ்பி பிரேம் ஆனந்​தன் கரூரில் இருந்து நேற்று சென்னை சென்​று, ஐ.ஜி. அஸ்ரா கார்க்​கிடம் வழக்கு தொடர்​பான ஆவணங்​களை ஒப்படைத்​தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x