Published : 05 Oct 2025 08:26 AM
Last Updated : 05 Oct 2025 08:26 AM

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை - தேசிய பட்டியலின ஆணையத் தலைவர் வலியுறுத்தல்

கரூர்: கரூர் தவெக பிரச்​சா​ரக் கூட்​டத்​தில் உயி​ரிழந்​தவர்​களின் குடும்​பத்​தினருக்கு அரசு வேலை வழங்க வேண்​டும் என்று தேசிய பட்​டியலின ஆணை​யத் தலை​வர் கிஷோர் மக்​வானா கூறி​னார்.

கரூரில் தவெக பிரச்​சா​ரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயி​ரிழந்​தது தொடர்​பாக, சம்​பவம் நடை​பெற்ற வேலு​சாமிபுரத்​தில் தேசிய பட்​டியலின ஆணை​யத் தலைவர் கிஷோர் மக்​வானா நேற்று ஆய்வு செய்​தார்.

தொடர்ந்​து, உயி​ரிழந்​தவர்​களின் குடும்​பத்​தினரை சந்​தித்​து, நடந்த சம்​பவம் குறித்து கேட்​டறிந்​து, ஆறு​தல் கூறி​னார். பின்​னர், கரூர் அரசு மருத்​து​வக் கல்​லூரி மருத்​து​வ​மனை​யில் சிகிச்சை பெற்று வரு​வோரை​யும் சந்​தித்​தார்.

பின்​னர், கரூர் சுற்​றுலா மாளி​கை​யில் மாவட்ட ஆட்​சி​யர் மீ.தங்​கவேல், மத்​திய மண்டல ஐ.ஜி. ஜோஷி நிர்​மல் குமார், எஸ்​.பி. ஜோஷ் தங்​கை​யா, அரசு மருத்​து​வக் கல்​லூரி மருத்​து​வ​மனை முதல்​வர் சாந்தி ஆகியோரிடம் கூட்ட நெரிசல், உயி​ரிழந்​தவர்​கள், சிகிச்சை பெற்​றவர்​கள் குறித்து விவரங்​களை கேட்​டறிந்​தார். பின்​னர் கிஷோர் மக்​வானா செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது:

கரூரில் கூட்ட நெரிசலில் 41 பேர் உயி​ரிழந்த சம்​பவம் வேதனையை ஏற்​படுத்​தி​யுள்​ளது. விழிப்​புடன் இருந்​திருந்​தால் உயி​ரிழப்பை தடுத்​திருக்​கலாம், தவிர்த்​திருக்​கலாம். இந்த சம்​பவத்தை முறை​யாக விசா​ரித்​து, மீண்​டும் இது​போல நடக்​காமல் பார்த்​துக் கொள்​ளு​மாறு விசா​ரணை ஆணை​யத்தை கேட்​டுக்​கொள்​கிறேன். இச்​சம்​பவம் குறித்து முறை​யாக விசா​ரணை நடத்த வேண்​டும்.

உயி​ரிழந்​தவர்​களின் ஒவ்​வொரு குடும்​பத்​துக்​கும் அரசு வேலை வழங்க வேண்​டும். ஏனெனில், உயி​ரிழந்​தவர்​கள் ஏழை மக்​கள். இந்த சம்​பவம் குறித்த முழு​மை​யான அறிக்​கையை நாங்​கள் கேட்​டுள்​ளோம். அந்த அறிக்​கை​யின் அடிப்​படை​யில் விசா​ரணையை தொடர்​வோம். இவ்​வாறு அவர் கூறி​னார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x