Last Updated : 04 Oct, 2025 02:38 PM

8  

Published : 04 Oct 2025 02:38 PM
Last Updated : 04 Oct 2025 02:38 PM

யூடியூபர் மாரிதாஸ் கைது - கரூர் சம்பவம் குறித்து அவதூறு பரப்பியதாக நடவடிக்கை!

யூடியூபர் மாரிதாஸ் (இடது) | விஜய் பிரச்சாரக் கூட்டம் (வலது)

சென்னை: கரூரில் தவெக தலைவர் விஜய் பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக அரசின் மீது அவதூறு ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டதாக யூடியூபர் மாரிதாஸ் கைது செய்யப்பட்டார். சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீஸார் இந்த கைது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். சென்னை, நீலாங்கரையில் உள்ள வீட்டில் மாரிதாஸ் கைது செய்யப்பட்டார்.

முன்னதாக மாரிதாஸ் தனது எக்ஸ் பக்கத்தில், “இன்று மாலை: நீதிமன்றத்தில் திமுக கும்பல் நடத்திய மொத்த நாடகத்தின் விவரம் வீடியோவாக வெளியிடப்படும். 10 ரூபா பாலாஜி.. விஜய் எதிராக நீதிமன்றத்தில் நடந்த தந்திரம் என்ன - மாலை 6 மணிக்கு..” என்று பதிவிட்டிருந்தார். விஜய் தரப்பு உச்ச நீதிமன்றத்தை நாட வேண்டும் என்றும் பதிவு செய்திருந்தார். அந்த ட்வீட்டைப் பகிர்ந்த சில நிமிடங்களிலேயே, ”என் இல்லத்திற்கு காவல் துறை கைது செய்ய வந்துள்ளது.” என்றும் ட்வீட் செய்திருந்தார். இந்நிலையில் அவர் கைது செய்யப்பட்டது உறுதியாகியுள்ளது.

கரூரில் கடந்த 27-ம் தேதி தவெக தலை​வர் விஜய் பங்​கேற்ற பிரச்​சா​ரக் கூட்​டத்​தில் நெரிசல் ஏற்​பட்டு 41 பேர் உயி​ரிழந்​தனர். 100-க்​கும் அதி​க​மானோர் படு​கா​யம் அடைந்​தனர். இதை தொடர்ந்​து, அரசி​யல் கட்சிகளின் ‘ரோடு ஷோ’ நிகழ்​வு​களுக்கு தடை விதிக்க வேண்​டும் என்று கோரி சென்னை உயர் நீதிமன்றத்​தில் வில்​லி​வாக்​கத்தை சேர்ந்த பி.ஹெச்​.​தினேஷ் என்​பவர் வழக்கு தொடர்ந்​திருந்​தார்.

நீதிபதி என்​.செந்​தில்​கு​மார் முன்பு இந்த வழக்கு நேற்று விசா​ரணைக்கு வந்​தது. அப்​போது, நீதிபதி செந்தில்குமார், “கரூர் சம்​பவத்​தில் உயி​ரிழந்​தவர்​களுக்கு ஆழ்ந்த இரங்​கலை தெரி​வித்​துக் கொள்​கிறேன். இதுதொடர்​பான காணொளி​கள் வேதனை அளிக்​கின்​றன. இந்த வழக்​கில் 2 பேர் மட்​டும் கைது செய்யப்பட்​டுள்​ளனர். வேறு என்ன நடவடிக்கை எடுக்​கப்​பட்​டது? அனைத்​தை​யும் தமிழக அரசு அனு​ம​தித்​திருப்​பது அதிருப்தி அளிக்​கிறது.

கரூரில் நடந்​துள்ள சம்​பவம் மனிதர்​களால் உரு​வாக்​கப்​பட்ட பேரழி​வு. நீதி​மன்​றம் இதை கண்​மூடி வேடிக்கை பார்த்​துக் கொண்டு இருக்​காது. பொறுப்பை யாரும் தட்​டிக்​கழிக்க முடி​யாது. பிரச்​சா​ரக் கூட்டத்தில் நெரிசல் ஏற்​பட்​டு, பெண்கள், குழந்தைகள் உட்பட ஏராள​மானோர் உயி​ரிழந்த நிலை​யில், கட்சித் தொண்​டர்​களை​யும், ரசிகர்​களை​யும் பொறுப்​பற்ற முறை​யில் கைவிட்​டு​விட்டு தவெக தலை​வர் விஜய் உள்​ளிட்ட நிர்​வாகி​கள் ஓடி​யுள்​ளனர். அவர்​களுக்கு தலை​மைப் பண்பு இல்​லை. சம்​பவத்​துக்கு பொறுப்​பேற்​காதது கண்​டனத்​துக்​குரியது.” என்று கூறி வழக்கை நீதிபதி முடித்​து​வைத்​தார்.

இந்நிலையில், இது பற்றி வீடியோ வெளியிடுவதாக மாரிதாஸ் கூறியிருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார். கரூர் விவ​காரம் தொடர்​பாக சமூக வலை​தளங்​களில் வதந்தி பரப்​பிய​தாக பாஜக கலை மற்​றும் கலாச்​சார பிரிவு மாநில செய​லா​ளர் சகா​யம் (38), தவெக மாங்​காடு உறுப்​பினர் சிவனேசன் (36), அதே கட்​சி​யின் ஆவடி வட்​டச் செய​லா​ளர் சரத்​கு​மார் (32), யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டு உள்ளிட்டோரை சென்னை போலீ​ஸார் கைது செய்​திருந்தனர். தற்போது அந்த வரிசையில் மாரிதாஸும் இணைந்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x