Published : 04 Oct 2025 06:38 AM
Last Updated : 04 Oct 2025 06:38 AM

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை: மெட்ரோ ரயில் திட்டப்பணிகள் நடக்கும் இடங்களில் 603 பம்புகள் தயார்

சென்னை: வடகிழக்கு பரு​வ​மழை தொடங்​க​வுள்ள நிலை​யில், 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்ட கட்​டு​மானப் பணி​கள் நடை​பெறும் இடங்​களில் போது​மான முன்​னெச்​சரிக்கை எடுக்​கப்​பட்​டுள்​ளது. இதற்​காக 603 திறன் வாய்ந்த தண்​ணீர் பம்​பு​கள் தயார் நிலையில் உள்​ள​தாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதி​காரி​கள் தெரி​வித்​தனர்.

நிகழாண்​டில் வடகிழக்கு பரு​வ​மழை இம்​மாதம் 2-வது முதல் 3-வாரத்​தில் தொடங்​க​வுள்​ளது. இதற்​கிடை​யில் சென்​னை​யில் மழை வெள்​ளத்​தைத் தடுக்க முன்​னெச்​சரிக்கை நடவடிக்​கையை சென்னை மாநக​ராட்சி நிர்​வாகம் எடுத்து வரு​கிறது. இது​போல, சென்னை​யில் 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்​டப்​பணி​கள் நடை​பெறும் இடங்​களில், மழை வெள்​ளம் புகுந்​து​வி​டா​மல் தடுக்க போதிய முன்​னெச்​சரிக்கை நடவடிக்​கையை சென்னை மெட்ரோ ரயில் நிர்​வாகம் தரப்​பில் எடுக்​கப்​பட்​டுள்​ளது.

இதுகுறித்​து, சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதி​காரி​கள் கூறிய​தாவது: 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்​டப்​பணி​கள் நடை​பெறும் இடங்​களில் மழைநீர் தேங்​கு​வதைத் தடுக்​கும் வித​மாக, கட்​டு​மானத் தளங்​களில் திறன் வாய்ந்த தண்​ணீர் பம்​பு​கள்தயார் நிலை​யில் வைக்​கப்​பட்​டுள்​ளன. அதாவது சிறியது, பெரியது என பல்​வேறு திறன் கொண்ட 603 தண்​ணீர் பம்​பு​கள் தயார் நிலையில் இருக்​கின்​றன.

மாதவரம் - சிறுசேரி சிப்​காட் வரையி​லான வழித்​தடத்​தில் 292 பம்​பு​களும், கலங்​கரை​விளக்​கம் - பூந்​தமல்லி வரையி​லான வழித்​தடத்​தில் 151 பம்​பு​களும், மாதவரம் - சோழிங்​கநல்​லூர் வழித்​தடத்​தில் 160 பம்​பு​களும் தயார் நிலை​யில் வைக்​கப்​பட்​டுள்​ளன. இதன்​மூல​மாக, மழைக்​காலத்​தின் போது ஏற்​படக்​கூடிய எந்​தவொரு சூழ்​நிலை​யை​யும் சமாளிக்க மெட்ரோ ரயில் நிர்​வாகம் தயா​ராக உள்​ளது. இதுத​விர சென்னை மாநக​ராட்​சி, மெட்ரோ ரயில் நிறு​வனம், நீர்​வளத் துறை, நெடுஞ்​சாலைத் துறை ஆகியன இணைந்து தொழில்​நுட்​பக் குழுவை அமைத்​தன.

சென்​னை​யில் கடந்த ஆண்டு 27 இடங்​களில் மழைநீர் முன்​னெச்​சரிக்கை எடுக்​கப்​பட்​டது. இந்த ஆண்​டும் அது​போல முன்​னெச்​சரிக்கை நடவடிக்கை எடுக்​கப்​பட்​டுள்​ளது. இந்த இடங்​களில் மாநக​ராட்சி மற்​றும் மெட்ரோ ரயில் நிறு​வனம் என்ன செய்ய வேண்​டும் என்று குழு தெளிவுபடுத்​தி​யுள்​ளது. அதன்​படி தேவை​யான நடவடிக்​கை எடுக்​கப்​படும்​.
இவ்​வாறு அவர்​கள்​ கூறினர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x