Published : 30 Sep 2025 06:30 AM
Last Updated : 30 Sep 2025 06:30 AM

ஆயுதபூஜை பண்டிகையை முன்னிட்டு சென்னை - திருவனந்தபுரம் உட்பட 3 சிறப்பு ரயில்கள்

சென்னை: ஆ​யுத பூஜையை முன்​னிட்​டு, சென்​னை​யில் இருந்து சொந்த ஊருக்கு செல்​லும் பயணி​கள் வசதிக்​காக, சென்னை எழும்​பூர் - திரு​வனந்​த​புரம் ரயில் உட்பட 3 சிறப்பு ரயில்​கள் இயக்​கப்​படும் என்று தெற்கு ரயில்வே அறி​வித்​துள்​ளது.

இது குறித்​து, தெற்கு ரயில்வே நேற்று வெளி​யிட்ட செய்​திக்குறிப்​பு: சென்னை எழும்​பூரில் இருந்து இன்று (30-ம் தேதி) இரவு 10.15 மணிக்கு சிறப்பு ரயில் (06075) புறப்​பட்​டு, நாளை மதி​யம் 2.05 மணிக்கு திரு​வனந்​த​புரம் வடக்கு நிலை​யத்தை அடை​யும். மறு​மார்க்​க​மாக, திரு​வனந்​த​புரம் வடக்கு நிலை​யத்​தில் இருந்து அக்​.5-ம் தேதி மாலை 4.30 மணிக்கு சிறப்பு ரயில் (06076) புறப்​பட்​டு, மறு​நாள் காலை 10.30 மணிக்கு சென்னை எழும்​பூரை வந்​தடை​யும்.

தாம்​பரம் - செங்​கோட்டை தாம்​பரத்​தில் இருந்து இன்று (30-ம் தேதி) மாலை 4.15 மணிக்கு முன்​ப​தி​வில்லா அதி​விரைவு சிறப்பு ரயில் (06013) புறப்​பட்​டு, மறு​நாள் அதி​காலை 3 மணிக்கு செங்​கோட்​டையை அடை​யும். சென்னை எழும்​பூரில் இருந்து இன்று (30-ம் தேதி) இரவு 11.45 மணிக்கு மெமு விரைவுசிறப்பு ரயில் (06161) புறப்​பட்​டு, மறு​நாள் காலை 10.15 மணிக்கு மதுரையை சென்​றடை​யும்.

இதுத​விர, யஸ்​வந்த்​பூர் - மங்​களூரு சந்​திப்பு இடையே ஒரு சிறப்பு ரயிலும் இயக்​கப்பட உள்​ளது. இந்த ரயிலுக்​கான முன்​ப​தி​வும், சென்னை எழும்​பூர் - திரு​வனந்​த​புரம் வடக்கு நிலை​யம் இடையே இயக்​கப்​படும் சிறப்பு ரயிலுக்​கான டிக்​கெட் முன்​ப​தி​வும் தொடங்​கி​யுள்​ளது. மற்ற இரண்டு சிறப்பு ரயில்​கள் முன்​ப​தி​வில்​லாத ரயில்​கள் ஆகும். இவ்​வாறு அதில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x