Last Updated : 30 Sep, 2025 11:27 AM

10  

Published : 30 Sep 2025 11:27 AM
Last Updated : 30 Sep 2025 11:27 AM

கரூர் சம்பவம் பற்றி வதந்தி பரப்பியதாக பிரபல யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டு கைது

யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டு

சென்னை: கரூர் துயரச் சம்பவம் பற்றி வதந்தி பரப்பியதாக பிரபல யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டு கைது செய்யப்பட்டுள்ளார்.

முன்னதாக,நேற்று முதல்​வர் ஸ்டா​லின் ஒரு காணொலி வெளியிட்டிருந்தார். அதில், “கரூர் கூட்ட நெரிசல் சம்​பவம் தொடர்​பாக சமூக வலை​தளங்​களில் ஏராள​மான காணொலிகள் பரவி வரு​கின்​றன. இதில் போலியான, ஜோடிக்​கப்​பட்ட காணொலி​களும் உள்​ள​தாக கூறப்​படு​கிறது. இது​போன்ற பொய் செய்​தி​களை பரப்ப வேண்​டாம்” என்று வேண்​டு​கோள் விடுத்​திருந்தார்.

அதனைத் தொடர்ந்து சென்னை காவல் ஆணை​யர் அருண் நேற்று ஒரு செய்​திக்​குறிப்பு வெளி​யிட்டிருந்தார். அதில் அவர், “கரூரில் நடை​பெற்ற அரசி​யல் கூட்ட நெரிசல் விபத்து குறித்து யாரும் எவ்​வித வதந்​தி​யை​யும் பரப்ப வேண்​டாம். விசா​ரணை அடிப்​படை​யில் அரசு உரிய நடவடிக்கை எடுத்து வரும் நிலை​யில், வலை​தளங்​களில் சிலர் பரப்​பும் பொய் செய்​தி​கள் பொது​மக்​கள் அமை​திக்கு பங்​கம் விளைவிக்​கும் வகை​யில் அமை​கிறது.

இதுதொடர்​பாக பெறப்​பட்ட புகார்​களின்​பேரில், பொது வெளி​யில் வதந்தி பரப்​பும் வகை​யில் சமூக வலை​தளங்​களில் செய்திகளை பதிவு செய்த வலைதள கணக்​காளர்​கள் 25 பேர் மீது வழக்​கு​கள் பதிவு செய்யப்பட்​டுள்​ளன.அவர்​கள் மீது கைது நடவடிக்கை மேற்​கொள்​ளப்​படும்.

எனவே, மக்​களுக்கு அச்​சம் ஏற்​படுத்​தும் வகை​யிலும், பொது அமை​திக்கு பங்​கம் விளைவிக்​கும் வகை​யிலும் யாரும் சமூக வலை​தளங்​களில் பதி​விட வேண்​டாம். மீறி செயல்​படு​வோர் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்​கப்​படும்.” என எச்சரித்திருந்தார்.

இதனையடுத்து, கரூர் விவ​காரம் தொடர்​பாக சமூக வலை​தளங்​களில் வதந்தி பரப்​பிய​தாக பாஜக கலை மற்​றும் கலாச்​சார பிரிவு மாநில செய​லா​ளர் சகா​யம் (38), தவெக மாங்​காடு உறுப்​பினர் சிவனேசன் (36), அதே கட்​சி​யின் ஆவடி வட்​டச் செய​லா​ளர் சரத்​கு​மார் (32) ஆகிய 3 பேரை சென்னை போலீ​ஸார் கைது செய்​தனர்.

இதன் நீட்சியாக பிரபல யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டும் கைது செய்யப்பட்டதாகத் தெரிகிறது. சென்னையில் உள்ள அவரது வீட்டில் இருந்து ஃபெலிக்ஸ் ஜெரால்டை போலீஸார் கைது செய்து அழைத்துச் சென்றனர். முதல்கட்ட தகவலில் கரூர் துயரச் சம்பவம் தொடர்பாக வதந்தி பரப்பியதற்காக ஃபெலிக்ஸ் கைதாகியுள்ளார் என்று கூறப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x