Published : 29 Sep 2025 11:34 AM
Last Updated : 29 Sep 2025 11:34 AM
கரூர்: கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த சுகுணா (65) சிகிச்சை பலனின்றி இன்று (செப். 29ம் தேதி) அதிகாலை மரணமடைந்தார். இதனால் கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 41ஆக அதிகரித்துள்ளது.
கரூர் வேலுசாமிபுரத்தில் நேற்று முன்தினம் நடந்த தவெக பிரச்சாரக் கூட்டத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் உயிரிழந்தனர். 80-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதில் கரூர் அரசு மருத்துவக் கல்லூரியில் சிசிச்சையில் இருந்த கரூர் தொழிற்பேட்டையை சேர்ந்த கவின் (34) சிகிச்சை பலனின்றி மரணமடைந்ததால் உயிரிழந்தவர் எண்ணிக்கை 40ஆக நேற்று அதிகரித்தது.
இந்நிலையில் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த சுகுணா (65) சிகிச்சை பலனின்றி இன்று (செப். 29-ம் தேதி) அதிகாலை மரணமடைந்தார். இதனால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 41ஆக அதிகரித்துள்ளது.
கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் 11 பேரும், சாதாரண வார்டில் 56 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் சிலர் தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், எல்.முருகன், மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் ஆகியோர் இன்று (செப். 29-ம் தேதி) காலை 11 மணிக்கு கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்தும், மேலும் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூற உள்ளனர்.
உயிரிழந்த 41 பேர் விவரம்
1. தாமரைக்கண்ணன்(25), த/பெ முருகேசன், பாகநத்தம், கரூர்.
2. ஹேமலதா(28), க/பெ ஆனந்த்ஜோதி, விஸ்வநாதபுரி, கரூர்
3. சாய்லெட்சனா(8), த/பெ ஆனந்த்ஜோதி. விஸ்வநாதபுரி. கரூர்
4. சாய்ஜீவா(4), த/பெ ஆனந்த்ஜோதி, விஸ்வநாதபுரி, கரூர்
5. சுகன்யா(33), க/பெ தேவேந்திரன், வடிவேல்நகர், கரூர்
6. ஆகாஷ்(23), த/பெ மாணிக்கம், காமராஜ்புரம், கரூர்
7. தனுஷ்குமார்(24), த/பெ இளங்கோவன், காந்திகிராமம், கரூர்
8. வடிவழகன்(54), த/பெ முத்துசாமி, பசுபதிபாளையம், கரூர்
9. ரேவதி(52), க/பெ முருகேசன், கொடுமுடி, ஈரோடு.
10. சந்திரா(40), க/பெ செல்வராஜ், ஏமூர் புதூர், கரூர்.
11. குரு விஷ்னு(2), த/பெ விமல், வடிவேல் நகர், வேலுசாமிபுரம், கரூர்.
12. ரமேஷ்(32), த/பெ பெருமாள், கோடங்கிபட்டி, கரூர்.
13. சனுஜ்(13), த/பெ ரகு, காந்திகிராமம், கரூர்.
14. ரவிகிருஷ்ணன்(32), த/பெ மருதாசலம், எல்.என்.எஸ் கிராமம், கரூர்.
15. பிரியதர்ஷ்ணி(35), க/பெ.சக்திவேல், ஏமூர், கரூர்.
16. தரணிகா(14), த/பெ சக்திவேல், ஏமூர், கரூர்.
17. பழனியம்மாள்(11), த/பெ பெருமாள், வேலுசாமிபுரம், கரூர்.
18. கோகிலா(14), த/பெ பெருமாள், வேலுசாமிபுரம், கரூர்.
19. மகேஷ்வரி (45), க/பெ சக்திவேல், மண்மங்கலம், கரூர்
20. அஜிதா(21), த/பெ மணி, தொக்குப்பட்டி, அரவக்குறிச்சி.
21. மாலதி(36), க/பெ கிருஷ்ணமூர்த்தி, ராயனூர் வடக்கு, கரூர்.
22. சுமதி(50), க/பெ மணி, 80 அடி ரோடு,கரூர்.
23. மணிகண்டன்(33), த/பெ பாலாஜி, தீர்த்தம்பாளையம், வெள்ளக்கோவில்.
24. சதீஷ்குமார் (34), த/பெ துரைசாமி, கொடுமுடி, ஈரோடு.
25. கிருத்திக்யாதவ்(7), த/பெ சரவணன். 5 ரோடு, கரூர்.
26. ஆனந்த்(26), த/பெ முருகன், சுக்காம்பட்டி, சேலம்.
27. சங்கர் கணேஷ்(45), த/பெ பால்ராஜ், வடக்கு தாளிபட்டி, குஜிலியம்பாறை.
28. விஜயராணி(42), க/பெ சக்திவேல், தாழைப்பட்டி, கரூர்.
29. கோகுலபிரியா(28), க/பெ ஜெயபிரகாஷ், செம்மாண்டபாளையம், வெள்ளகோவில்.
30. பாத்திமா பானு(29), க/பெ பிரபாகரன், கொள்ளப்பட்டி, ஒட்டன்சத்திரம்.
31. கிஷோர் (17), த/பெ கணேஷ், வடக்கு காந்திகிராமம், கரூர்.
32. ஜெயா(55), க/பெ சுப்பிரமணி, வெங்கமேடு, கரூர்.
33. அருக்காணி(60), ஏமூர், கரூர்.
34. ஜெயந்தி(43), க/பெ சதீஷ்குமார், வேலாயுதம்பாளையம், புகளூர்.
35. கோகுலஸ்ரீ (எ) சவுந்தர்யா(27), உப்பிடமங்கலம், கரூர்
36. ஸ்ரீநாத்(16), புதுக்காம்பள்ளி வீரக்கல் புதூர், மேட்டூர்.
37. மோகன்(19), ஜம்பை, பவானி, ஈரோடு.
38. பிரித்திக்(10), த/பெ பன்னீர்செல்வம், தாந்தோணிமலை, கரூர்.
39. பிருந்தா (22), புதுப்பட்டி சேந்தமங்கலம் அரவக்குறிச்சி.
39. கிஷோர் (18), த/பெ கணேஷ், காந்தி கிராமம், கரூர்.
40. கவின்(34), தொழிற்பேட்டை, கரூர்.
41. சுகுணா (65), தொழிற்பேட்டை, கரூர்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT