Published : 28 Sep 2025 12:52 AM
Last Updated : 28 Sep 2025 12:52 AM
சென்னை: கரூரில் நடைபெற்ற தவெக தலைவர் விஜய் பிரச்சாரத்தின்போது கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள் உட்பட குழந்தைகள், பெண்கள் உள்பட 38 பேர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், தனி விமானம் மூலம் கரூர் புறப்பட்டுச் சென்றார் முதல்வர் ஸ்டாலின்.
கரூரில் நடைபெற்ற தவெக தலைவர் விஜய் பிரச்சாரத்தின்போது கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள் உட்பட 38 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாடு முழுவதும் இந்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சம்பவத்துக்கு பிரதமர் மோடி, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனி விமானம் மூலம் கரூர் புறப்பட்டுச் சென்றார். அங்கு அவர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் சொல்வார் என்றும், மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்திப்பார் என்றும் கூறப்படுகிறது. இதனால் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உள்ளிட்ட பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT