Last Updated : 27 Sep, 2025 11:02 PM

 

Published : 27 Sep 2025 11:02 PM
Last Updated : 27 Sep 2025 11:02 PM

கரூர் நெரிசல் சம்பவம்: ‘உயிரிழந்த தமிழ் பிள்ளைகளுக்கு எனது கண்ணீர் வணக்கம்’ - சீமான்

சென்னை: கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் சனிக்கிழமை பிரச்சாரம் மேற்கொண்டார். இதில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 31 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் இது தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

“இது எதிர்பாராமல் நடந்த விபத்துதான். திட்டமிட்டு யாரும் இப்படி செய்வதில்லை. இந்த மரணம் நம் எல்லோருக்கும் காயத்தையும், வலியையும் கொடுத்துள்ளது. நம்மைவிட அதிக மன வேதனையில் விஜய் இருப்பார். உயிரிழந்த தமிழ் பிள்ளைகளுக்கு எனது கண்ணீர் வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன்” என சீமான் தெரிவித்தார்.

கரூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் சம்பவத்துக்கு பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, நடிகர் ரஜினிகாந்த், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளது தமிழக அரசு.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x