Published : 27 Sep 2025 06:01 AM
Last Updated : 27 Sep 2025 06:01 AM

காங்கிரஸ் எம்.பி.க்களுடன் முதல்வரை இன்று சந்திக்கிறார் செல்வப்பெருந்தகை

சென்னை: தமிழக காங்​கிரஸ் எம்​.பி.க்​களு​டன் அக்​கட்​சி​யின் மாநில தலை​வர் செல்​வப்​பெருந்​தகை முதல்​வர் ஸ்​டா​லினை இன்று சந்​திக்​கிறார். தமிழகத்​தில் விஷ்ணுபிர​சாத் (கடலூர்), கார்த்தி சிதம்​பரம் (சிவகங்​கை), விஜய் வசந்த் (கன்​னி​யாகுமரி), மாணிக்​கம் தாகூர் (விருதுநகர்), ஜோதி​மணி (கரூர்), ராபர்ட் புரூஸ் (திருநெல்​வேலி), ஆர்​.சுதா (மயி​லாடு​துறை), கோபி​நாத் (கிருஷ்ணகிரி), சசி​காந்த் செந்​தில் (திரு​வள்​ளூர்) ஆகிய 9 பேர் காங்​கிரஸ் எம்​பிக்​களாக உள்​ளனர்.

தமிழகத்​தில் 2019-ம் ஆண்டு முதல் திமுக கூட்​ட​ணி​யில் நீடித்து வரும் காங்​கிரஸின் மகளிரணி நிர்​வாகி​யாக இருந்​தவரை முன்னாள் அமைச்​சர் செந்​தில் பாலாஜி திமுக​வில் சேர்த்​திருப்​ப​தாக அறி​வித்​துள்​ளார். ஏற்​கெனவே செந்​தில் ​பாலாஜி​யும், காங்கிரஸ் எம்.பி. ஜோதி​மணி​யும் கரூர் மாவட்​டத்​தில் மோதல் போக்​கில் ஈடு​பட்டு வந்த நிலை​யில், இந்த விவ​காரம் கூட்​டணி கட்சிகள் மத்​தி​யில் பூதாகர​மாக வெடித்​துள்​ளது.

இதற்​கிடை​யில், 2026 தேர்​தலில் அதிக இடம், ஆட்​சி​யில் பங்கு என காங்​கிரஸ் மூத்த தலை​வர் கே.எஸ்​.அழகிரி குரல் கொடுத்துள்ளார். சட்​டப்​பேரவை கட்​சித் தலை​வ​ரான ராஜேஷ்கு​மாரும் ஆட்​சி​யில் பங்கு என்ற கருத்தை வலி​யுறுத்தி பேசி வருகிறார். மேலும், தமிழகம் முழு​வதும் காங்​கிரஸ்- திமுக இடையே கடை நிலை​யில் சுமுக​மான உறவு இல்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வரு​கிறது.

இது​மட்​டுமின்​றி, காங்​கிரஸ் எம்​.பி. தொகு​தி​களில், பெரும்​பாலான எம்​.பி.க்​களுக்கு உள்​ளாட்சி அமைப்​பு​கள், அலு​வல​கம் அமைத்து தரவில்லை என்ற குற்​றச்​சாட்​டும் அக்​கட்சி எம்​.பி.க்​கள் மத்​தி​யில் இருந்து வரு​கிறது. மேலும் திமுக நிர்​வாகி​களால் காங்​கிரஸ் எம்​.பி.களுக்கு பல்​வேறு இடையூறுகளும் கொடுக்​கப்​பட்டு வரு​வ​தாக அவர்​கள் குற்​றம்​சாட்டி வரு​கின்​றனர். அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி​யும், திமுக-​காங்​கிரஸ் இடையே பிளவு ஏற்​படு​வதற்​கான சூழல் நிலவி வரு​வ​தாக தனது பிரச்சாரத்தில் தெரி​வித்​துள்​ளார்.

இந்​நிலை​யில் இரு கட்​சிகளும் ஒற்​றுமை​யுடன்​தான் இருக்​கின்றன என தமிழக மக்​களுக்கு தெரிவிக்​க​வும், காங்​கிரஸ் எம்.பி.க்கள், உள்​ளூர் அளவில் திமுக​வினரிடம் எதிர்​கொள்​ளும் பிரச்​சினை​கள், ஒத்​துழை​யாமை குறித்து புகார் தெரிவிக்​க​வும், செல்​வப்​பெருந்​தகை தலை​மை​யில் எம்​பிக்​களு​டன் முதல்​வர் ஸ்டா​லினை தி​முக தலைமை அலு​வல​கத்​தில்​ இன்​று சந்​திக்​க திட்​ட​மிட்​டுள்​ளார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x