Published : 24 Sep 2025 06:13 AM
Last Updated : 24 Sep 2025 06:13 AM

அதிமுக கோஷ்டிகளை பாஜகதான் வழிநடத்தும்: மார்க்சிஸ்ட் விமர்சனம்

சென்னை: அ​தி​முக எத்​தனை கோஷ்டிகளாக இருந்​தா​லும், அனைத்​தை​யும் பாஜக​தான் வழிநடத்​தும் என்று மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் கட்​சி​யின் மாநிலச் செய​லா​ளர் பெ.சண்​முகம் கூறி​னார்.

இது தொடர்​பாக அவர் தனது சமூக வலை​தளப் பதி​வில் கூறி​யிருப்​ப​தாவது: அதி​முக​வின் ஒவ்​வொரு கோஷ்டியைச் சேர்ந்​தவர்​களும் தனித்​தனி​யாக டெல்லி சென்​று, மத்​திய உள்​துறை அமைச்​சர் அமித் ஷா வை சந்​தித்து வரு​கின்​றனர். பாஜக​தான் அதி​முகவை வழி நடத்​துக்​கிறது என்​ப​தற்கு இதுவே எடுத்​துக்​காட்​டு.

‘மோடியா - லேடி​யா’ என்று முழங்​கிய முன்​னாள் முதல்​வர் ஜெயலலி​தா​வின் அதி​முக, தற்​போது அண்​ணன் அமித் ஷா என்ன சொல்​கிறாரோ அதன்​படி​தான் நடப்​போம் என்ற பரி​தாப நிலைக்​குத் தள்​ளப்​பட்​டுள்​ளது. அந்​தவகை​யில், அதி​முக எத்​தனை கோஷ்டிகளாகப் பிரிந்​தா​லும், அந்த அனைத்து கோஷ்டிகளை​யும் பாஜக​தான் வழிநடத்​தும். இதைத்​தான் டெல்லி சந்​திப்​பு​கள் உறு​திப்​படுத்​துகின்​றன. இவ்​வாறு சண்​முகம் தெரி​வித்​துள்​ளார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x