Published : 23 Sep 2025 10:40 AM
Last Updated : 23 Sep 2025 10:40 AM

ஆ.ராசா இருந்தும் ஆட்டம் காட்டும் திமுக கோஷ்டிகள் - உதகையும் உள்குத்து அரசியலும்!

நீலகிரி மாவட்ட திமுக-வில் இப்போது பவர்ஃபுல் சக்தியாக இருப்பவர் எம்பி-யும் கட்சியின் துணைப் பொதுச்செயலாளருமான ஆ.ராசா தான். தான் ஊரில் இல்லாத நேரங்களிலும் தொகுதி மற்றும் கட்சி சார்ந்த விஷயங்களைக் கவனித்துக் கொள்வதற்காக தனது அக்காள் மகன் பரமேஸ்குமாரை ஊட்டியில் நிரந்தரமாக உட்கார வைத்திருக்கிறார் ஆ.ராசா. ஆனாலும் உட்கட்சி உள்குத்துகளை தவிர்க்க முடியாத சூழல் தான் ஊட்டியிலும் நிலவுகிறது.

நீல​கிரி மாவட்ட அரசி​யலுக்கு ஆ.ராசா வரு​வதற்கு முன்​ன​தாகவே முன்​னாள் அமைச்​சர் கா.​ரா​மச்​சந்​திரனும் முன்​னாள் அரசு கொறடா பா.​மு.​மு​பாரக்​கும் திமுக-​வில் இரு துருவ அரசி​யலை தொடங்கிவிட்​டார்​கள். மாவட்​டச் செய​லா​ள​ராக முபாரக் இருந்​தும் கடந்த முறை அவருக்கு சீட் கொடுக்​காத திமுக தலைமை குன்​னூரில் கா.​ரா​மச்​சந்​திரனுக்கு சீட் கொடுத்​தது. ராமச்​சந்​திரன் வெற்றி பெற்​ற​தால் அவர் வனத்​துறைக்​கும் அமைச்​ச​ரா​னார்.

அமைச்​ச​ரான​தால் முபாரக்​கின் கை சற்றே தாழ்ந்து ராமச்​சந்​திரனின் கை ஓங்​கியது. இதனால் இயல்​பாகவே இரண்டு தரப்​பும் கோஷ்டி அரசி​யலில் கொடிகட்​டிப் பறந்​தன. இந்த நிலை​யில், தலை​மைக்கு யார் என்ன புகாரை தட்​டி​விட்​டார்​களோ தெரிய​வில்​லை... வனத்​துறையி​லிருந்து சுற்​றுலாத்​துறைக்கு அமைச்​ச​ராக்​கப்​பட்​டார் ராமச்​சந்​திரன்.

அப்​போதும் முறுக்​கு​வதை விடாத முபாரக் கோஷ்டி, ராமச்​சந்​திரனை ஒரேயடி​யாக அமைச்​சர​வையி​லிருந்து தூக்​கு​வதற்கு என்​னென்ன ‘நல்ல’ காரி​யங்​களைச் செய்​ய​முடி​யுமோ அத்​தனையை​யும் செய்​தது. இதனால் தலை​வலியை தாங்​க​முடி​யாத திமுக தலை​மை, கடந்த ஆண்டு ராமச்​சந்​திரனை அமைச்​சர​வையி​லிருந்து நீக்கி அரசு கொற​டா​வாக அமர​வைத்​தது.

ராமச்​சந்​திரனை வீழ்த்த முபாரக் கோஷ்டி​யினர் என்​ன​வெல்​லாம் செய்​தார்​களோ அதற்கு கொஞ்​ச​மும் குறை​வில்​லாத வகை​யில் முபாரக்கை மாவட்​டச் செய​லா​ளர் பதவியி​லிருந்து தூக்​கு​வதற்​கான வேலை​களை சமயம் கிடைக்​கும் போதெல்​லாம் செய்து வந்​தது ராமச்​சந்​திரன் கோஷ்டி.

இதையடுத்​து, கிட்​டத்​தட்ட 11 ஆண்டு காலம் மாவட்​டச் செய​லா​ள​ராக கோலோச்சி வந்த முபாரக்​கிற்கு கடந்த பிப்​ர​வரி மாதம் ஓய்​வு​கொடுத்த திமுக தலை​மை, அவருக்​குப் பதிலாக இளை​ய​வ​ரான தலை​மைச் செயற்​குழு உறுப்​பினர் கே.எம்​.​ராஜுவை மாவட்​டப் பொறுப்​பாள​ராக நியமித்​தது. ராஜு கொறடா ராமச்​சந்​திரனின் விசு​வாசி​யாக அடை​யாளப்​படுத்​தப் பட்​ட​தால் அவருக்​கும் இப்​போது குடைச்​சல் கொடுக்க ஆரம்​பித்​திருக்​கி​றார்​கள்.

கா.ராமச்சந்திரன், பா.மு.முபாரக், கே.எம்.ராஜு

இதுகுறித்து நம்​மிடம் பேசிய நீல​கிரி மாவட்ட திமுக-​வினர், “2021 தேர்​தலில் ஆ.ராசா களத்​தில் இருந்​தும் கோஷ்டி அரசி​ய​லால் தான் திமுக கோட்​டை​யான கூடலூர் தொகுதி சொற்ப வாக்​கு​கள் வித்​தி​யாசத்​தில் அதி​முக கைக்கு போனது. அப்​படி​யும் இவர்​கள் திருந்​தி​ய​பாடில்லை என்​ப​தால் தான் ராமச்​சந்​திரனும் வேண்​டாம் முபாரக்​கும் வேண்​டாம் என்று முடி​வெடுத்து அவர்​களை டம்​மி​யாக்​கி​விட்டு ராஜூவை மாவட்​டச் செய​லா​ள​ராக்​கியது தலை​மை.

ஆனால், ராஜூவை​யும் செயல்பட விடா​மல் தடுக்​கி​றார்​கள். தலை​மைக்கு நெருக்​க​மான ஆ.ராசா இங்​கிருப்​ப​தால் அவரை மீறி​யும் ராஜூ​வால் எது​வும் செய்​ய​முடிய​வில்​லை. மாவட்​டத்​தில் உள்ள மூன்று தொகு​தி​களி​லும் இம்​முறை திமுக ஜெயிக்க வேண்​டும் என்​றால் ராஜூவுக்கு இடைஞ்​சல் கொடுக்​காமல் கொஞ்​ச​மாவது அவரை சுதந்​திரமா செயல்​பட​விட​ணும்” என்​ற​னர்.

மாவட்ட திமுக பொறுப்​பாள​ரான கே.எம்​.​ராஜூ​விடம் இது குறித்து பேசினோம். “நான் நீண்ட கால​மாக திமுக-வுக்​காக உழைத்து வரு​கிறேன். அதை அங்​கீகரிக்​கும் வித​மாகத்​தான் தலைமை என்னை மாவட்​டப் பொறுப்​பாள​ராக்கி இருக்​கிறது. தலைமை என்​மீது வைத்​துள்ள நம்​பிக்கை பொய்க்​காத வகை​யில் அனை​வரை​யும் ஒருங்​கிணைத்து இம்​முறை மாவட்​டத்​தில் உள்ள 3 தொகு​தி​களி​லும் திமுக கூட்​ட​ணியை ஜெயிக்க வைப்​பது மட்​டுமே இப்​போது எங்​களின் ஒரே இலக்​கு” என்​றார் அவர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x