Published : 20 Sep 2025 09:48 AM
Last Updated : 20 Sep 2025 09:48 AM

‘அய்யா - சின்ன அய்யா பிரச்சினையை அவசரமா பேசி முடிங்க...’ - பழனிசாமிக்கு பாமக நிர்வாகிகள் கோரிக்கை!

“பிரிந்து சென்றவர்களை மீண்டும் அதிமுக-வில் சேர்க்க வேண்டும்” என கெடுவைத்துக் கிளம்பி இருக்கிறார் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன். “அதிமுக-வுக்கு துரோகம் செய்தவர்களை மீண்டும் கட்சியில் சேர்க்க சாத்தியமே இல்லை” என டெல்லி வரைக்கும் போய் சொல்லிவிட்டு வந்திருக்கிறார் அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ்.

இப்​படி, பிர​தான எதிர்க்​கட்​சி​யான அதி​முக தேர்​தலை முன்​னிட்டு இன்​னும் தெளி​வான திசையை நோக்கி திட​மாக பயணிக்க முடி​யாமல் இருக்​கும் நிலை​யில், 2021-ல் தங்​களுக்கு கைகொடுத்த பாமக-வுக்​குள் தந்​தைக்​கும் மகனுக்​கும் இடை​யில் நடக்​கும் அதி​கார யுத்​தத்தை முடிவுக்கு கொண்​டுவர இபிஎஸ் மெனக்​கிட வேண்​டும் என்ற கரிசனக் குரல்​கள் பாமக தரப்​பிலிருந்து கேட்க ஆரம்​பித்​திருக்​கின்​றன.

இன்​றைய நிலை​யில், அதி​முக அணிக்கு சாதக​மான மனநிலை​யில் இருக்​கும் கட்​சிகளில் ஓரளவுக்கு கணிச​மான வாக்கு வங்​கியை வைத்​திருக்​கும் கட்சி பாமக. ஆனால், ராம​தாஸ் - அன்​புமணி மோதலால் அந்த வாக்கு வங்கி இம்​முறை ஒரு​முக​மாக அதி​முக அணிக்கு கிடைக்​குமா என்ற சந்​தேகத்தை எழுப்பி இருக்​கிறது. அசுர பலத்​துடன் நிற்​கும் ஆளும் கட்​சிக் கூட்​ட​ணியை சமாளிக்க வேண்​டு​மா​னால் அதற்கு ஒன்​று​பட்ட பாமக-​வின் தயவு அதி​முக-வுக்கு தேவை.

இது குறித்து நம்​மிடம் பேசிய தரு​மபுரி மாவட்ட பாமக நிர்​வாகி​கள் சிலர், “அதி​முக உட்​கட்சி பிரச்​சினை குறித்​தான தனது நிலைப்​பாட்டை இபிஎஸ் தெளி​வாக சொல்​லி​விட்​டார். இப்​படிச் சொல்​லி​விட்டு இருந்​து​விட்​டால் மட்​டும் ஓட்டு விழுந்​து​வி​டாது. சொந்​தக் கட்சி பிரச்​சினை​களை ஒதுக்கி வைத்​து​விட்டு வலு​வான கூட்​ட​ணியை கட்​டமைப்​பதற்​கான வேலை​களை அவர் இனி​யா​வது தொடங்க வேண்​டும். அதற்​கு, முதலில் அவர் செய்ய வேண்​டியது மருத்​து​வர் ராம​தாஸை​யும் அன்​புமணி​யை​யும் சமா​தானப்​படுத்​து​வது தான்.

வட மாவட்​டங்​களில் சுமார் நாற்​பதுக்​கும் மேற்​பட்ட தொகு​தி​களில் பாமக இப்​போதும் வலிமையோடு இருக்​கிறது. 2001-ல் அதி​முக கூட்​ட​ணி​யில் 27 தொகு​தி​களில் போட்​டி​யிட்ட பாமக, 20 இடங்​களை வென்​றது. 2006-ல் திமுக கூட்​ட​ணி​யில் 30 தொகு​தி​களைப் பெற்று 18 இடங்​களில் வென்​றது. 2016-ல் தனித்து நின்றே சுமார் 22 லட்​சம் வாக்​கு​களைப் பெற்​றது பாமக.

இதெல்​லாம் தெரிந்து தான் தனது ஆட்​சி​யின் முடி​வில் வன்​னியருக்கு 10.5 சதவீத உள் இடஒதுக்​கீடு வழங்கி ஆணை பிறப்​பித்​தார் இபிஎஸ். அதனால் தான் 2021 தேர்​தலில் வடமாவட்​டங்களில் அதி​முக கூட்​ட​ணிக்கு கணிச​மான வெற்​றி​யும் கிடைத்​தது. இட ஒதுக்​கீடு விவ​காரத்​தில் அடுத்து வந்த திமுக அரசு தனது கடமையை சரி​யாகச் செய்​ய​வில்லை என்று ஆதங்​கத்​தில் இருக்​கும் வன்​னியர் சமூகத்​தினர், அதி​முக மீது இன்னமும் அனு​தாபத்​துடன் இருக்​கி​றார்​கள்.

பாமக ஒன்​று​பட்டு இருந்து அதனுடன் அதி​முக-​வும் கூட்​டணி சேர்ந்​தால் நிச்​ச​யம் கடந்த முறையை விட கூடு​தலான இடங்​களில் வெல்​ல​முடி​யும் என்று வன்​னியர் மக்​கள் வெளிப்​படை​யாகவே பேச ஆரம்​பித்​திருக்​கி​றார்​கள். இதைப் புரிந்து கொண்டு மருத்​து​வர் அய்​யா​வை​யும் அன்​புமணி​யை​யும் ஒன்​றாக உட்​கார​வைத்​துப் பேசி பாமக-வை மீண்​டும் ஒன்​று​படுத்​தும் முயற்​சியை இபிஎஸ் எடுக்க வேண்​டும். சொந்​தக் கட்​சி​யினரும் அய்​யா​வின் குடும்​பத்​தினரும் எடுக்​கும் முயற்​சிகளை விட பாமக ஒற்​றுமைக்​காக இபிஎஸ் எடுக்​கும் முயற்​சிக்கு நிச்​ச​யம் பலன் கிடைக்​கும்” என்​றார்​கள்.

இதுகுறித்து ராம​தாஸ் தரப்பு பாமக இணைப் பொதுச்​செய​லா​ள​ரான அருள் எம்​எல்​ஏ-​விடம் கேட்​ட​போது, “நெல்​லிக்​காய் மூட்டை போல் அங்​கொன்​றும் இங்​கொன்​று​மாக சிதறிக்​கிடந்த வன்​னியர் சமூகத்தை ஒருங்​கிணைத்து கட்டி எழுப்பி பாமக-​வாக உரு​வாக்​கிய​வர் மருத்​து​வர் ராம​தாஸ் தான். அவரை தலை​வ​ராக கொண்ட ஒருங்​கிணைந்த பாமக தான் வலிமை​யான பாமக-​வாக இருக்க முடி​யும். அத்​தகைய வலிமை​யான ஒருங்​கிணைந்த பாமக அதி​முக கூட்​ட​ணி​யில் இடம்​பெறும்​போது அந்த அணி 2026 தேர்​தலில் வென்று கண்​டிப்​பாக தமி​ழ​கத்​தில் ஆட்சி அமைக்​கும். இப்​படி ஒரு அணி உரு​வாக அமித் ஷா, இபிஎஸ் போன்​றவர்​கள் முயற்சி எடுக்க வேண்​டும்” என்​றார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x