Published : 19 Sep 2025 10:32 AM
Last Updated : 19 Sep 2025 10:32 AM

ஊருக்கெல்லாம் பஞ்சாயத்து செய்கிறார் அமைச்சர் நேரு... உள்ளூர் பஞ்சாயத்தை தீர்க்க ஆளில்லை!

தர்ணாவில் ஈடுபட்ட முத்துச்செல்வம் | உள்படம்: கே.என்.நேரு

தமிழகம் முழுவதும் திமுக மேயர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தொடர்பாக டூரடித்து விசாரணை நடத்தும் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, தேவைப்பட்டால் அவர்களிடம் ராஜினாமா கடிதங்களையும் எழுதி வாங்கி வருகிறார். ஆனால், அவரது சொந்த ஊரான திருச்சியில் திமுக மேயருக்கு எதிராக திமுக கவுன்சிலர்களே ஒத்துழையாமை இயக்கம் நடத்தி வருவதை கண்டுகொள்ளத்தான் ஆளில்லை.

​திருச்சி மாநக​ராட்​சி​யில் மொத்​தம் உள்ள 65 வார்​டு​களில் 50 வார்​டு​களை தன்​வசம் வைத்​திருக்​கிறது திமுக. பிர​தான எதிர்க்​கட்​சி​யான அதிமுகவுக்கு மூன்று கவுன்​சிலர்​கள் மட்​டுமே இருப்​ப​தால் இங்கு எதிர்க்​கட்சி வரிசையி​லிருந்து எதிர்ப்​புக் குரல்​கள் அவ்​வள​வாய் வரு​வ​தில்​லை. அதை​யும் சேர்த்து ஆளும் கட்சி கவுன்​சிலர்​களே செய்து கொண்​டிருப்​ப​தால் விளை​யாட்டு மைதானம் போல் ஆகிக் கொண்​டிருக்​கிறது மாநக​ராட்​சி.

திருச்சி மேய​ராக அமைச்​சர் நேரு​வின் விசு​வாசி​யான மு.அன்​பழ​க​னும், துணை மேய​ராக அமைச்​சர் அன்​பில் மகேஸின் விசு​வாசி​யான ஜி.​திவ்யாவும் இருக்​கி​றார்​கள். இவர்​களுக்கு ஆதர​வாக தலா 25 திமுக கவுன்​சிலர்​கள் இருக்​கி​றார்​கள். இதில் பெரும்​பாலான​வர்​கள் மேயர் அன்பழகனுக்கு குடைச்​சல் கொடுப்​ப​தையே வாடிக்​கை​யாக வைத்​திருக்​கி​றார்​கள். இதில் என்ன விநோதம் என்​றால் அமைச்​சர் நேரு​வின் ஆதர​வாளர்​கள் தான் அன்​பழ​கனை அதி​கம் சோதிக்கி​றார்​கள்.

கடந்த ஆண்டு மார்ச் மாதம், நேரு​வின் ஆதர​வாள​ரான காஜாமலை விஜய், மேயர் அன்​பழ​கன் தனது வார்​டுக்கு எது​வுமே செய்​ய​வில்லை எனச் சொல்லி மாநக​ராட்சி வளாகத்​திலேயே தீக்​குளிப்​புப் போராட்​டம் நடத்​தி​னார். அதற்கு முந்​தைய கூட்​டத்​தில், திமுக கவுன்​சிலர்​களான முத்துச்செல்வம், ராம​தாஸ் ஆகி​யோர் மேயரைக் கண்​டித்து மாமன்ற கூட்​டத்​தில் உள்​ளிருப்​புப் போராட்​டம் நடத்​தினர்.

அமைச்​சர் அன்​பில் மகேஸின் திரு​வெறும்​பூர் தொகு​திக்​குட்​பட்ட அரியமங்​கலம் குப்​பைக் கிடங்​கில் மகேஸின் விருப்​பத்​துக்கு மாறாக மீன் தீவன தொழிற்​சாலைக்கு அனு​மதி அளித்த மேயரைக் கண்​டித்து துணை மேயர் திவ்யா தலை​மை​யில் கடந்த ஜூலை​யில் மகேஸ் ஆதரவு கவுன்​சிலர்​கள் மாமன்​றத்​தி​லிருந்து வெளிநடப்பு செய்​தனர். இதே​போல் இன்​னொரு கூட்​டத்​தில், தனது வார்​டுக்கு மேயர் எது​வுமே செய்​யாமல் அல்வா கொடுப்பதாகச் சொல்​லிக் காட்டி மேயருக்கே அல்வா வாங்​கிக் கொண்​டு​வந்து கொடுத்​தார் திமுக கவுன்​சிலர் பொற்​கொடி.

திமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு...

கடந்த ஆகஸ்ட் மாதம் நடந்த மாமன்​றக் கூட்​டத்​தில் நிதிக்​குழு தலை​வ​ரான முத்​துச்​செல்​வம் சத்​திரம் பேருந்து நிலை​யத்​தில் இருசக்கர வாகன நிறுத்​து​மிடத்​துக்​கான டெண்​டர் முறை​கேடு குறித்து பிரச்​சினை எழுப்பி தர்ணா செய்​தார். அதே கூட்​டத்​தில், இன்​னொரு திமுக கவுன்​சில​ரான ராமதாஸ், “நீங்​கள் மேயர் இருக்​கை​யில் உட்​காரவே தகு​தி​யற்​றவர்” என அன்​பழ​கனை வார்த்​தைகளால் வசை​பாடி​னார். இதைத் தாங்​கிக் கொள்​ள​முடி​யாத மேயர், அவருக்கு மாமன்​றக் கூட்​டங்​களில் கலந்​து​கொள்ள இரண்டு மாதங்​கள் தடை​வி​தித்​ததும் நடந்​தது.

இப்​படி ஆளும் கட்சி கவுன்​சிலர்​களே தொடர்ந்து உங்​களின் தூக்​கத்​தைக் கெடுத்​துக் கொண்​டிருக்​கி​றார்​களே என்று மேயர் அன்​பழ​க​னிடம் கேட்டதற்கு, “நான் தொடர்ந்து 5-வது முறை​யாக கவுன்​சில​ராக இருக்​கிறேன். ஒவ்​வொரு முறை​யும் ஒவ்​வொரு வார்​டில் போட்​டி​யிட்டு வெற்​றி​பெற்​றுள்​ளேன். மக்​கள் ஆதரவு இல்​லாமல் யாருமே தொடர்ந்து வெற்​றி​பெற முடி​யாது.

இது புரி​யாமல் காழ்ப்​புணர்ச்சி மற்​றும் பொறாமை காரண​மாக எனக்கு எதி​ராக சிலர் மாமன்​றத்​தில், தொட்​டதுக்​கெல்​லாம் பிரச்​சினை செய்​கி​றார்​கள். கூட்​டம் நடப்​ப​தற்கு முன்​ன​தாக திமுக கவுன்​சிலர்களை அழைத்து கூட்​டம் போடு​கி​றோம். அப்​போது எது​வும் சொல்​லாமல் அமை​தி​யாக இருந்து​விட்டு வேண்​டுமென்றே மாமன்​றக் கூட்​டத்​தில் வந்து பிரச்​சினை செய்​கி​றார்​கள். இவர்​கள் மீது தலைமை தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்​றார்.

ஊருக்​கெல்​லாம் பஞ்​சா​யத்து தலை​வ​ராக இருக்​கும் அமைச்​சர் நேரு உள்​ளூர் பஞ்​சா​யத்தை எப்​போது தீர்த்​து​வை​க்​கப் போகிறார்?

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x