Published : 19 Sep 2025 06:40 AM
Last Updated : 19 Sep 2025 06:40 AM

வெலிங்டன் முப்படை அதிகாரிகள் பயிற்சி கல்லூரி முதல்வராக லெப். ஜெனரல் மணீஷ் எரி பொறுப்பேற்பு

வெலிங்டன் முப்படை அதிகாரிகள் பயிற்சிக் கல்லூரி முதல்வராக பொறுப்பேற்றுள்ள லெப். ஜெனரல் மணீஷ் எரியிடம் பொறுப்புகளை ஒப்படைத்த லெப். ஜெனரல் வீரேந்திர வாட்ஸ்.

குன்னூர்: வெலிங்​டனில் உள்ள முப்​படை அதி​காரி​கள் பயிற்​சிக் கல்​லூரி முதல்​வ​ராக லெப்​டினென்ட் ஜெனரல் மணீஷ் எரி பொறுப்​பேற்​றார். நீல​கிரி மாவட்​டம் குன்​னூர் அருகே வெலிங்​டனில் உள்ள முப்​படை அதி​காரி​கள் பயிற்​சிக் கல்​லூரி 1905-ல் குவெட்​டா​வில் நிறு​வப்​பட்​டது. பின்​னர் 1947-ல் அது வெலிங்​ட​னுக்கு மாற்​றப்​பட்​டது. இந்​தக் கல்​லூரி இந்​தி​யா​வின் முப்​படை அதி​காரி​களுக்​கான முன்​னணி பயிற்சி நிறு​வன​மாகும்.

இங்​கு, ராணுவம், கடற்​படை, விமானப்​படை அதி​காரி​களுக்​கும், நட்பு நாடு​களின் அதி​காரி​களுக்​கும் தலை​மைத்​து​வம், கூட்​டாக செயல்​படும் திறன், வியூ​கங்​கள் வகுத்​தல், பணி​யாளர் நிர்​வாகம் ஆகிய​வற்​றின் உயர் நுணுக்​கங்​களில் பயிற்சி அளிக்​கப்​படு​கிறது. இக்​கல்​லூரி​யின் முதல்​வ​ராக லெப்​டினென்ட் ஜெனரல் மணீஷ் எரி நேற்று பொறுப்​பேற்​றார். இப்​பொறுப்​பில் இருந்த லெப்​டினன்ட் ஜெனரல் வீரேந்​திர வாட்​ஸ், லெப்​டினென்ட் ஜெனரல் மணீஷ் எரி​யிடம் பொறுப்​பு​களை ஒப்​படைத்​தார்.

லெப்​டினன்ட் ஜெனரல் மணீஷ் எரி கடக்​வாஸ்​லா​வில் உள்ள தேசிய பாது​காப்பு அகாடமி மற்​றும் டேராடூனில் உள்ள இந்​திய ராணுவ அகாட​மி​யின் முன்​னாள் மாணவர் ஆவார். டிசம்​பர் 1988-ல் இந்​திய ராணுவத்​தின் ஜம்​மு-​காஷ்மீர் இலகு காலாட்​படை​யில் அதி​காரி​யாக இணைந்​தார்.

அதிக பதக்​கங்​களை பெற்ற மூத்த ராணுவ அதி​காரி​யான ஜெனரல் மணீஷ் எரி, இந்​திய ராணுவத்​தில் 37 ஆண்​டு​கால அனுபவம் வாய்ந்​தவர். கிழக்கு லடாக்​கில் உள்ள சுஷுலில் அதிஉயர பகு​தி​கள், வடக்கு பிராந்​தி​யத்​தில் பனிச் சிகரங்​களைக் கொண்ட பகு​தி​கள் போன்​றவற்​றில் அவர் ராணுவ பட்​டா​லியன்​களுக்கு தலைமை வகித்​துள்​ளார்.

நாட்​டின் கிழக்​குப் பிராந்​தி​யத்​தில், ராணுவ காலாட்​படை​யின் மலைப்​பிரி​வில் ஒரு புதிய பட்​டா​லியனை உரு​வாக்கி அதனை வழிநடத்​தி​னார். பின்​னர் கிழக்கு பிராந்​தி​யத்​தில் கஜ்​ராஜ் படை வகுப்​புக்கு தலைமை வகித்​தார். தேசிய பாது​காப்​புப் படை​யின் தலை​மையகத்​தில் இன்​ஸ்​பெக்​டர் ஜெனரல் (செயல்​பாடு​கள்), ராணுவ தென்​மேற்கு ஆணை​யகத்​தின் (கா​மாண்​டின்) தலைமை நிர்​வாக அதி​காரி, பாது​காப்பு அமைச்சக தலை​மையகத்​தில் ராணுவப் பிரி​வின் வியூக திட்​ட​மிடலுக்​கான தலைமை இயக்​குநர் ஆகிய நிலைகளி​லும் பணி​யாற்​றி​யுள்​ளார்.

தற்​போது தலைமை வகிக்​கும் வெலிங்​டன் முப்​படை அதி​காரி​கள் பயிற்​சிக் கல்​லூரி​யின் முன்​னாள் மாணவரும் ஆவார். லெப்​டினென்ட் ஜெனரல் மணீஷ் எரி கூறும்போது, ‘‘பாது​காப்​புக் கல்​வி, கூட்​டாக செயல்​படு​தல் போன்​றவற்​றில் முப்​படை அதி​காரி​களுக்​கும் மிகச்​சிறந்த பயிற்​சிக் கல்​லூரி​யாக இக்​கல்​லூரியை இயக்க உறு​தி​யேற்​று உள்​ளேன்’’ என்றா​ர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x