Published : 18 Sep 2025 05:57 AM
Last Updated : 18 Sep 2025 05:57 AM

மகாளய அமாவாசை: ராமேசுவரத்துக்கு சிறப்பு பேருந்துகள்

சென்னை: ம​காளய அமா​வாசையை முன்​னிட்டு ராமேசுவரத்​துக்கு சிறப்பு பேருந்​துகள் இயக்க ஏற்​பாடு செய்​யப்​பட்​டுள்​ளது.

இதுதொடர்​பாக அரசு விரைவு போக்​கு​வரத்​துக் கழக மேலாண் இயக்​குநர் ஆர்​.மோகன் வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: செப்​.21-ம் தேதி மகாளய அமா​வாசையை முன்​னிட்​டு, 20-ம் தேதி சென்​னை, சேலம், கோயம்​புத்​தூர், ஈரோடு, திருப்​பூர், பெங்​களூரு​வில் இருந்து ராமேசுவரத்​துக்​கும், 21-ம் தேதி ராமேசுவரத்​தில் இருந்து மேற்​கண்ட நகரங்​களுக்​கும் கூடு​தல் சிறப்பு பேருந்​துகள் இயக்​கப்​படு​கின்​றன.

இந்த பேருந்​துகளை www.tnstc.in என்ற இணை​யதளம் மற்​றும் tnstc செயலி மூலம் முன்​ப​திவு செய்து பயணிக்க வழி​வகை செய்​யப்​பட்​டுள்​ளது. சிறப்பு பேருந்து இயக்​கத்தை கண்​காணிக்க, குறிப்​பிட்ட பேருந்து நிலை​யங்​களில் போதிய அலு​வலர்​கள் நியமிக்​கப்​பட்​டுள்​ளனர். இவ்​வாறு அதில் கூறப்​பட்​டுள்​ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x