Published : 18 Sep 2025 06:08 AM
Last Updated : 18 Sep 2025 06:08 AM

பெங்களூரு புறப்பட்ட விமானத்தில் இயந்திர கோளாறு ஏற்பட்டதால் சென்னையில் தரையிறக்கம்

சென்னை: சென்​னை​யில் இருந்து 160 பேருடன் பெங்​களூரு புறப்​பட்ட விமானத்​தில், திடீரென்று இயந்​திர கோளாறு ஏற்​பட்​ட​தால் மீண்​டும் சென்​னை​யில் தரை​யிறக்​கப்​பட்​டது. சென்​னை​யில் இருந்து நேற்று முன்தினம் இரவு 7.05 மணிக்கு பெங்​களூர் செல்ல வேண்​டிய இண்​டிகோ ஏர்​லைன்ஸ் பயணி​கள் விமானம், தாமத​மாக இரவு 7.50 மணிக்கு புறப்​பட்​டது. 160 பயணி​கள், 5 விமான ஊழியர்​கள் உட்பட 165 பேர் இருந்​தனர்.

விமானம் சென்​னை​யில் இருந்து புறப்​பட்​டு, காஞ்​சிபுரம் கடந்து வேலூர் அருகே நடு வானில் பறந்து கொண்​டிருந்த போது, திடீரென, விமானத்​தில் இயந்​திர கோளாறு ஏற்​பட்​டுள்​ளது. இதை கண்​டு​பிடித்த விமானி, உடனடி​யாக சென்னை விமான நிலைய கட்​டுப்​பாட்டு அறையை தொடர்பு கொண்டு தகவலை தெரி​வித்​தார்.

விமானத்தை மீண்​டும் சென்​னைக்கு திருப்பி கொண்டு வந்து தரை​யிறக்​கு​மாறு கட்​டுப்​பாட்டு அறை அதி​காரி​கள் உத்​தர​விட்​டனர். இதையடுத்​து, 8.30 மணிக்கு விமானம் சென்​னை​யில் தரை​யிறக்​கப்​பட்​டட்​து. விமானத்​தில் இருந்து பயணி​கள் அனை​வரும் கீழே இறக்​கப்​பட்​டு, சென்னை விமான நிலைய ஓய்​வறை​களில் தங்க வைக்​கப்​பட்​டனர்.

விமான பொறி​யாளர்​கள் விமானத்தை பழுது பார்க்​கும் முயற்​சி​யில் ஈடு​பட்​டனர். ஆனால் உடனடி​யாக விமானத்​தில் ஏற்​பட்ட பிரச்​சினையை சரிசெய்ய முடிய​வில்​லை. இதையடுத்​து, இரவு 10 மணிக்கு பயணி​கள் அனை​வரும் மாற்று விமானத்​தில், சென்​னை​யில் இருந்து பெங்​களூருக்​கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x