Published : 18 Sep 2025 05:22 AM
Last Updated : 18 Sep 2025 05:22 AM

பெரியார் பிறந்த தினம் சமூக நீதி நாளாக அனுசரிப்பு: முதல்வர், அமைச்சர்கள், தலைவர்கள் மரியாதை

பெரியார் பிறந்த நாளையொட்டி திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள அவரது சிலையின் கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த உருவப் படத்துக்கு நேற்று மலர் தூவி மரியாதை செலுத்திய முதல்வர் மு.க.ஸ்டாலின். உடன் அமைச்சர்கள் உள்ளிட்டோர். | படம்: ர.செல்வமுத்துகுமார் |

சென்னை: பெரி​யாரின் பிறந்த நாள் தமிழக அரசின் சார்​பில், சமூக நீதி நாளாக அனுசரிக்​கப்​பட்​டது. அவரது படத்​துக்கு முதல்​வர் மு.க.ஸ்​டா​லின், அமைச்​சர்​கள் மற்​றும் அரசி​யல் கட்சி தலை​வர்​கள் மரி​யாதை செலுத்​தினர். சமூக அடக்​கு​முறை​களை எதிர்த்து போராடிய​வர் என புகழாரம் சூட்​டினர்.

பெரி​யாரின் 147-வது பிறந்த நாள் தமிழகம் முழு​வதும் நேற்று உற்​சாக​மாக கொண்​டாடப்​பட்​டது. தமிழக அரசு பெரி​யார் பிறந்த தினத்தை சமூக நீதி நாளாக கொண்​டாடியது. திருச்சி மத்​திய பேருந்து நிலை​யம் அரு​கே​யுள்ள பெரி​யாரின் சிலைக்கு அருகே மலர்​களால் அலங்​கரித்து வைக்​கப்​பட்​டிருந்த அவரது படத்​துக்கு முதல்​வர் ஸ்​டா​லின் மலர் தூவி மரி​யாதை செலுத்​தி​னார். தொடர்ந்​து, முதல்​வர் தலை​மை​யில் அனை​வரும் சமூக நீதி நாள் உறு​தி​மொழி ஏற்​றனர்.

அதே​போல், அரசு சார்​பில் சென்​னை​யில் அண்​ணா​சாலை​யில் அமைந்​துள்ள பெரி​யாரின் சிலைக்கு மாலை அணிவிக்​கப்​பட்​டு, கீழே மலர்​மாலை​யால் அலங்​கரித்து வைக்​கப்​பட்​டிருந்த பெரி​யாரின் உருவ படத்​துக்கு அமைச்​சர் பி.கே. சேகர்​பாபு மலர் தூவி மரி​யாதை செலுத்​தி​னார். இந்​நிகழ்ச்​சி​யில், செய்​தித் துறை செயலர் வே.​ராஜா​ராமன், செய்தி த்துறை இயக்​குநர் இரா.​வைத்​தி​நாதன் உள்பட பலர் கலந்​துக் கொண்​டனர்.

அதிமுக சார்பில் மரியாதை: அதி​முக சார்​பில், அண்​ணா​சாலை​யில் அண்ணா மேம்​பாலம் கீழே அமைந்​துள்ள பெரி​யாரின் சிலைக்கு கட்​சி​யின் அவைத் தலை​வர் அ.தமிழ்​மகன் உசேன், முன்​னாள் அமைச்​சர்​கள் டி.ஜெயக்​கு​மார், பா.பெஞ்​சமின் உள்​ளிட்​டோர் மலர் தூவி மரி​யாதை செலுத்​தினர்.

தொடர்ந்​து, முன்​னாள் முதல்​வர் ஓ.பன்​னீர்​செல்​வம், அமமுக பொதுச்​செய​லா​ளர் டி.டி.​வி.​தினகரன் ஆகியோ​ரும் மரி​யாதை செலுத்​தினர். தமிழக காங்​கிரஸ் சார்​பில், சென்னை சத்​தி​யமூர்த்தி பவனில், பெரி​யார் படத்​துக்கு மாநில தலை​வர் கு.செல்​வப்​பெருந்​தகை மலர்​தூவி மரி​யாதை செலுத்​தி​னார்.

வேப்​பேரி, பெரி​யார் திடலில் உள்ள பெரி​யார் சிலைக்கு இந்​திய கம்​யூனிஸ்ட் கட்​சி​யின் மூத்த தலை​வர் இரா.​முத்​தரசன், மாநிலச் செய​லா​ளர் மு.வீர​பாண்​டியன் ஆகியோர் மாலை அணி​வித்து மரி​யாதை செலுத்​தினர். எழும்​பூரில் உள்ள மதி​முக தலைமையகத்தில் கட்​சி​யின் பொதுச்​செய​லா​ளர் வைகோ​வும், கோயம்​பேட்​டில் உள்ள தேமு​திக தலை​மையகத்​தில் கட்​சி​யின் தலைமை நிலை​யச் செய​லா​ளர் பார்த்​த​சா​ர​தி​யும், விழுப்​புரத்​தில் பாமக தலை​வர் அன்​புமணி ராம​தாஸ் மற்​றும் போயஸ் தோட்டத்​தில் உள்ள தனது இல்​லத்​தில் வி.கே.சசிகலா​வும் பெரி​யார் படத்​துக்கு மலர் தூவிமரி​யாதை செலுத்​தி​னார்.

முதல்வர் வாழ்த்து: பெரி​யாரின் பிறந்​த​நாளை​யொட்டி முதல்​வர் ஸ்​டா​லின் சமூக வலை​தளத்​தில் நேற்று வெளி​யிட்ட பதி​வில், "தந்தை பெரி​யார் இனப்​பகை​யைச் சுட்​டெரிக்​கும் பெருநெருப்​பு. தமிழினத்​தின் எழுச்​சிக்​கான பகுத்​தறி​வுப் பேரொளி. பெரி​யார் என்​றும், எங்​கும் நிலைத்​தி ருப்​பார்" என குறிப்​பிட்​டுள்​ளார்.

எதிர்க்​கட்​சித் தலை​வர் பழனி​சாமி தனது பதி​வில்​,‘‘ பகுத்​தறிவு பகல​வனின் பிறந்த நாளில் அவர் வகுத்த சமூக நீதிப்​பாதை​யில் என்​றும் பயணித்​து, உண்​மை​யான சமத்​துவ ஆட்​சி​யை, அதி​முக தலை​மை​யில் 2026-ல் அமைக்க உறு​தி​யேற்​போம்’’ என தெரி​வித்​துள்​ளார்​.

முதல்வர் தலைமையில் உறுதிமொழி ஏற்பு பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு, திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில், சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் உள்ள பெரியார் சிலைக்கு கீழே வைக்கப்பட்டிருந்த பெரியார் படத்துக்கு முதல்வர் ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செய்தார்.

அதன்பின், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்ற முதல்வர் ஸ்டாலின், பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது, முதல்வர் ஸ்டாலின் தலைமை வகித்து சமூக நீதி நாள் உறுதிமொழியை வாசிக்க, அங்கு கூடியிருந்த அரசு அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர். இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள், எம்.பி.க்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x