Published : 18 Sep 2025 07:01 AM
Last Updated : 18 Sep 2025 07:01 AM

போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஆதரவாக சிஐடியு நாளை ஆர்ப்பாட்டம் 

சென்னை: ​போக்​கு​வரத்து தொழிலா​ளர்​களுக்கு ஆதர​வாக மாநிலம் முழு​வதும் நாளை ஆர்ப்​பாட்​டம் நடை​பெறும் என சிஐடியு அறி​வித்​துள்​ளது.

இதுதொடர்​பாக மாநில பொதுச்​செய​லா​ளர் ஜி.சுகு​மாறன் விடுத்த அறிக்​கை​: தமிழக அரசின் அரசு போக்​கு​வரத்​துக் கழகத்​தில் பணி​யாற்​றும் தொழிலா​ளர்​கள் தங்​களின் நியாய​மான கோரிக்​கைகளை வலி​யுறுத்​தி​யும் ஓய்​வு​பெற்ற தொழிலா​ளர்​களின் பணபலன்​களை வழங்க கோரி​யும் கடந்த 30 நாட்​களாக தமிழகத்​தின் அனைத்து பணிமனை​கள் முன்​பும் காத்​திருப்பு போராட்​டம் நடத்தி வரு​கின்​றனர். பிற துறை​களுக்கு நிதி ஒதுக்​கு​வது​போல் போக்​கு​வரத்து துறைக்​கும் அரசு நிதி ஒதுக்​க வேண்டும்.

வரும் காலம் பண்​டிகை காலம் என்​பதை மனதில் கொண்டு தமிழக அரசு மற்​றும் போக்​கு​வரத்து கழகம் சுமுக தீர்வு காண வேண்டும். பல்​வேறு சிரமங்​களுக்கு மத்​தி​யில் மக்​களுக்கு எவ்​வித இடையூறும் ஏற்​ப​டாத வண்​ணம் போராடும் தொழிலா​ளர்​களுக்கு ஆதர​வாக தமிழகத்​தின் அனைத்து மாவட்​டங்​களி​லும் நாளை ஆர்ப்​பாட்​டம் நடத்​தப்​படும். இவ்​வாறு கூறப்​பட்​டுள்​ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x