Published : 17 Sep 2025 11:13 AM
Last Updated : 17 Sep 2025 11:13 AM

பாமக தலைமை அலுவலக முகவரியை மாற்றி மோசடி செய்துள்ளனர்: ஜி.கே.மணி குற்றச்சாட்டு

விழுப்புரம்: ​பாமக தலை​வர் அன்​புமணி என தேர்​தல் ஆணை​யம் கூற​வில்​லை. பாமக தலைமை அலு​வல​கத்​தின் முகவரியை மாற்றி மோசடி செய்​துள்​ளனர் என்று கட்​சி​யின் கவுர​வத் தலை​வர் ஜி.கே.மணி கூறி​னார். திண்​டிவனம் அடுத்த தைலாபுரத்​தில் செய்​தி​யாளர்​களிடம் அவர் கூறிய​தாவது: தேர்​தல் ஆணை​யம் வெளி​யிட்​டுள்ள கடிதத்​தில் பிஹார், தமிழ்​நாடு, புதுச்​சேரி மாநிலங்​களில் பாமக​வுக்கு மாம்​பழச் சின்​னம் ஒதுக்​கப்​பட்​டுள்​ள​தாக தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

அந்த கடிதத்​தின் முகவரி ‘தலை​வர், பாமக, எண் - 10, திலக் தெரு, தி.நகர், சென்னை - 17’ என உள்​ளது. பாமக அலு​வலக முகவரி மாற்​றம் ராம​தாஸுக்கு அதிர்ச்​சியை ஏற்​படுத்​தி​யுள்​ளது. பாமக​வின் நிரந்தர முகவரி ‘63 நாட்​டு​முத்து நாயக்​கன் தெரு, தேனாம்​பேட்​டை, சென்​னை’ என்​பது​தான். சூழ்ச்​சி​யால் பாமக தலைமை அலு​வலக முகவரி மாற்​றப்​பட்​டுள்​ளது. உண்​மை​யில் தேர்​தல் ஆணை​யம் கடிதம் அனுப்​பியது பாமக தலை​வருக்​குத்​தான். ஆனால், தேனாம்​பேட்​டைக்கு கடிதம் போகாமல், திலக் தெரு​வுக்கு சென்​றுள்​ளது.

மாமல்​லபுரத்​தில் கடந்த 9-ம் தேதி நடை​பெற்ற பொதுக்​குழுக் கூட்​டத்​தில் தேர்வு செய்​யப்​பட்ட நிர்​வாகி​களை பதிவு செய்து கொள்​கிறோம் என தேர்​தல் ஆணை​யம் மற்​றொரு கடிதத்​தில் தெரி​வித்​துள்​ளது. பாமக தலை​வ​ராக 28-05-22-ல் பொறுப்​பேற்ற அன்​புமணி​யின் பதவிக் காலம் கடந்த 28-05-25-ம் தேதி​யுடன் முடிவடைந்​து​விட்​டது. தலை​வர் பதவி​யில் இல்​லாதவர் மாமல்​லபுரத்​தில் எப்​படி பொதுக்​குழுவை கூட்ட முடி​யும்? அந்​தக் கூட்​டத்​தில் நிர்​வாகி​கள் தேர்வு செய்​யப்​பட்​டதும் செல்​லாது.

கட்​சி​யின் நிறு​வனர் மற்​றும் தலை​வர் ராம​தாஸ்​தான். இதை நிர்​வாகக் குழு மற்​றும் செயற்​குழு அங்​கீகரித்​துள்​ளது. பாமக தலை​வர் என்​று​தான் தேர்​தல் ஆணை​யம் கடிதம் எழு​தி​யுள்​ளது. தலை​வருக்​கு​தான் பாமக​வின் மாம்​பழம் சின்​னம் ஒதுக்​கீடு செய்​யப்​பட்​டுள்​ளது. தற்​போது ராம​தாஸ்​தான் தலை​வர். முகவரி மாற்​றம்​தான் மோசடிக்கு முக்​கியக் காரணம். மாம்​பழம் சின்​னம் ஒதுக்​கீடு செய்​யப்​பட்​ட​தாக தேர்​தல் ஆணை​யம் அனுப்​பிய கடிதம் ராம​தாஸுக்கு சொந்​த​மானது. இது தொடர்​பாக வழக்​கறிஞர் பாலு நடத்​திய நாடகத்தை யாரும் நம்ப மாட்​டர்​கள்.

யார் வேண்​டும் என்​றாலும் தலை​வர் என்று சொல்​லிக் கொள்​ளலாம். கட்​சியை தொடங்​கிய​வர் யார் என்று எல்​லோருக்​கும் தெரி​யும். பாமக​வில் தொடர வேண்​டும் என்று கரு​தி​னால், ராம​தாஸுடன் இணைந்து பயணிப்​பது​தான் நல்​லது. பாமகவை பிளவு​படுத்​தும் முயற்சி பலிக்​காது. இவ்​வாறு அவர் கூறி​னார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x