Published : 17 Sep 2025 06:04 AM
Last Updated : 17 Sep 2025 06:04 AM

கோயில் நிலத்தை நீர்ப்பிடிப்பு பகுதியாக மாற்ற முயற்சி: இந்து முன்னணி குற்றச்சாட்டு

சென்னை: கோயில் நிலத்தை நீர்ப்​பிடிப்பு பகு​தி​யாக மாற்ற தமிழக அரசு முயன்று வரு​வ​தாக இந்து முன்​னணி குற்​றம்​சாட்டி உள்ளது.

இதுகுறித்து, இந்து முன்​னணி​யின் எக்ஸ் தளத்​தில் கூறப்​பட்​டிருப்​ப​தாவது: சென்ன கேசவ பெரு​மாள் கோயிலுக்கு சொந்​த​மான 300 கோடி மதிப்​புள்ள நிலத்தை சிலர் ஆக்​கிரமிக்க முயற்சி செய்து வரு​கின்​றனர். இது ஒரு​புறம் இருக்க தமிழக அரசு, கோயில் நிலத்தை நீர்ப்​பிடிப்பு பகு​தி​யாக மாற்​று​வதற்கு முயன்று வரு​கிறது. இது​போன்று கோயில் நிலத்தை அரசு பயன்​பாட்​டுக்​கும் அலு​வல​கங்​கள் மற்​றும் கழிப்​பிடங்​கள் கட்​டு​வதற்​கும் முயற்சி செய்​கின்​றனர்.

ஆனால், நீதி​மன்​றம் கோயில் நிலத்தை கோயிலுக்கே பயன்​படுத்த வேண்​டும் என்று வரலாற்று சிறப்​புமிக்க உத்​தரவை வழங்கியுள்​ளது. சமீபத்​தில் விருதுநகர் மாவட்​டம் இருக்​கன்​குடி மாரி​யம்​மன் கோயில் சம்​பந்​த​மான வழக்​கில் நீதிப​தி​கள் அறநிலையத் துறை சட்​டப்​படி கோயில் சொத்​துகளை பாது​காப்​பது அதி​காரி​களின் கடமை என்று அறி​வுறுத்​தி​யுள்​ளது. இனியாவது அதி​காரி​கள் நீதி​மன்ற உத்​தர​வை​யும் அறநிலை​யத் துறை சட்​டத்​தை​யும் மதிக்க வேண்​டும். இவ்​வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x