Published : 17 Sep 2025 06:17 AM
Last Updated : 17 Sep 2025 06:17 AM

சென்னை, புறநகர் மாவட்டங்களில் விடிய விடிய கொட்டித்தீர்த்த மழை: தென் சென்னையில் 12 செமீ பதிவு

சென்னை: சென்​னை, புறநகர் மாவட்​டங்​களில் நேற்று அதி​காலை விடிய விடிய கனமழை கொட்​டித் தீர்த்​தது. சென்​னை, புறநகர் மாவட்​டங்​களில் கடந்த ஒரு மாத​மாக விட்டு விட்டு மழை பெய்து வரு​கிறது. கடந்த ஆக. 30-ம் தேதி நள்​ளிர​வில் பெய்த அதி​க​னமழை​யால், 27 விமான சேவை​கள் பாதிக்​கப்​பட்​டன.

அதி​கபட்​ச​மாக வட சென்​னை​யில் மணலி​யில் 27 செமீ, மணலி புதுநகரில் 26 செமீ, விம்கோ நகரில் 23 செமீ மழை பதி​வாகியுள்ளது. இந்த அதி​க​னமழை மேகவெடிப்​பால் நிகழ்ந்​த​தாக வானிலை ஆய்வு மையம் முதன் முறை​யாக அறி​வித்​தது.

அதனைத் தொடர்ந்து கடந்த செப்​.14-ம் தேதி அதி​காலை விடிய விடிய பலத்த இடி​யுடன் கூடிய கனமழை கொட்​டித் ​தீர்த்​தது. அதி​கபட்​ச​மாக சென்னை பாரி​முனை​யில் 11 செமீ, கொளத்​தூர், திரு​வள்​ளூர் மாவட்​டம் ஊத்​துக்​கோட்​டை​யில் தலா 9 செமீ, பொன்​னேரி​யில் 8 செமீ மழை பதி​வானது.

இதன் தொடர்ச்​சி​யாக நேற்று அதி​காலை​யில் சென்​னை, புறநகர் மாவட்​டங்​களில் பரவலாக மிக கனமழை கொட்​டித்​தீர்த்​தது. இந்த முறை தென் சென்​னை​யில் மழை அதி​க​மாக பதிவாகி​யுள்​ளது. நேற்று காலை 8.30 மணி​யுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதி​வான மழை அளவு​களின்​படி அதி​கபட்​ச​மாக தென் சென்னை பகு​தி​களான ஒக்​கி​யம் துரைப்​பாக்​கம், சைதாப்​பேட்​டை​யில் தலா 12 செமீ, கண்​ணகி நகரில் 11 செமீ, திரு​வள்​ளூர் மாவட்​டம் பள்​ளிப்​பட்​டில் 9 செமீ, சென்னை பள்​ளிக்​கரணை, மேட​வாக்​கம், மணலி, டிஜிபி அலு​வல​கம், மணலி புதுநகரில் தலா 8 செமீ மழை பதி​வாகி​யுள்​ளது.

கனமழை காரண​மாக சென்னை மாநகரில் பல்​வேறு சாலைகளில் அதி​காலை நேரத்​தில் மழைநீர் தேங்​கிய​தால், சாலைகளில் பாதை குறுகி, வாக​னங்​கள் ஊர்ந்​த​வாறு சென்​ற​தால், போக்​கு​வரத்து நெரிசல் ஏற்​பட்​டது.

நேற்று அதி​காலை தோகா​விலிருந்து சென்னை வந்த விமானம் தரை​யிறங்க முடி​யாமல், பெங்​களூருக்கு திருப்பி விடப்​பட்​டது. துபாய், லண்​டன், சார்ஜா விமானங்​கள் வானில் வட்​டமடித்​து, தாமத​மாக தரை​யிறக்​கப்​பட்​டன. சென்​னையி​லிருந்​து புறப்​பட வேண்​டிய சில வி​மானங்​களும்​ ​தாமத​மாக புறப்​பட்​டுச்​ சென்​றன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x