Published : 17 Sep 2025 06:09 AM
Last Updated : 17 Sep 2025 06:09 AM

செங்கோட்டை, தூத்துக்குடி, போத்தனூர், நாகர்கோவிலுக்கு ஆயுதபூஜை, தீபாவளியை முன்னிட்டு சிறப்பு ரயில்கள்

சென்னை: ஆ​யுத​பூஜை, தீபாவளி பண்​டிகையை முன்​னிட்​டு, சென்​னை​யில் இருந்து 6 சிறப்பு ரயில்​கள் அறிவிக்​கப்​பட்​டுள்​ளன. அடுத்த மாதத்​தில் ஆயுத​பூஜை, விஜயதசமி, தீபாவளி பண்​டிகை ஆகியவை அடுத்​தடுத்து வர உள்​ளன. இதை முன்​னிட்​டு, சென்​னை​யில் இருந்து சொந்த ஊர்​களுக்கு சென்று திரும்​பும் பயணி​கள் வசதிக்​காக 6 சிறப்பு ரயில்​கள் இயக்​கப்பட உள்​ளன.

அதன்​படி, சென்னை சென்ட்​ரலில் இருந்து செப்​.25, அக்​.2, 9, 16, 23 ஆகிய தேதி​களில் இரவு 11.50 மணிக்கு அதி​விரைவு வாராந்​திர சிறப்பு ரயில் (06123) புறப்​பட்​டு, மறு​நாள் காலை 8.30 மணிக்கு போத்​தனூரை சென்​றடை​யும். மறு​மார்க்​க​மாக, போத்​தனூரில் இருந்து செப்​.26, அக்​.3, 10, 17, 24 ஆகிய தேதி​களில் மாலை 6.30 மணிக்கு சிறப்பு ரயில் (06124) புறப்​பட்​டு, மறு​நாள்அதி​காலை 3.15 மணிக்கு சென்னை சென்ட்​ரலை வந்​து அடை​யும்.

சென்னை சென்ட்​ரலில் இருந்து செப்​.24, அக்​. 1, 8, 15, 22 ஆகிய தேதி​களில் பிற்​பகல் 3.10 மணிக்கு வாராந்​திர சிறப்பு ரயில் (06121) புறப்​பட்​டு, மறு​நாள் காலை 6.30 மணிக்கு செங்​கோட்​டையை சென்​றடை​யும். மறு​மார்க்​க​மாக, செங்​கோட்​டை​யில் இருந்து செப்​.25, அக்​.2, 9, 16,23 ஆகிய தேதி​களில் இரவு 9 மணிக்கு சிறப்பு ரயில் (06122) புறப்​பட்​டு, மறு​நாள் முற்​பகல் 11.30 மணிக்கு சென்னை சென்ட்​ரலை வந்​தடை​யும்.

நாகர்​கோ​விலில் இருந்து செப்​.28, அக்​.5, 12, 19, 26 ஆகிய தேதி​களில் இரவு 11.15 மணிக்கு சிறப்பு ரயில் (06012) புறப்​பட்​டு, மறு​நாள் பகல் 12.30 மணிக்கு தாம்​பரத்தை வந்​தடை​யும். மறு​மார்க்​க​மாக, தாம்​பரத்​தில் இருந்து செப்​.29, அக்​.6, 13, 20, 27 ஆகிய தேதி​களில் முற்​பகல் 3.30 மணிக்கு சிறப்பு ரயில் (06011) புறப்​பட்​டு, மறு​நாள் அதி​காலை 5.15 மணிக்கு நாகர்​கோ​விலை சென்​றடை​யும்.

திருநெல்​வேலி​யில் இருந்து செப்​.25, அக்​.2, 9, 16, 23 ஆகிய தேதி​களில் இரவு 9.30 மணிக்கு சிறப்பு ரயில் (06070) புறப்​பட்​டு, மறு​நாள் காலை 10 மணிக்கு சென்னை எழும்​பூரை வந்​தடை​யும். மறு​மார்க்​க​மாக, சென்னை எழும்​பூரில் இருந்து செப்​.26, அக்​.3, 10, 17, 24 ஆகிய தேதி​களில் நண்​பகல் 12.30 மணிக்கு சிறப்பு ரயில் (06069) புறப்​பட்​டு,மறு​நாள் அதி​காலை 1.30 மணிக்குதிருநெல்​வேலியை சென்​று அடை​யும்.

இதுத​விர, சென்னை எழும்​பூர் - தூத்​துக்​குடி இடையே​வும்,சென்னை சென்ட்​ரல் - நாகர்​கோ​வில் இடையே​வும் சிறப்பு ரயில்​கள் இயக்​கப்பட உள்​ளன. இந்தசிறப்பு ரயில்​களுக்​கான டிக்​கெட் முன்​ப​திவு இன்று (17-ம்தேதி) காலை 8 மணிக்கு தொடங்​கு​கிறது என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x