Published : 17 Sep 2025 06:39 AM
Last Updated : 17 Sep 2025 06:39 AM

தேர்தலில் மாற்றுத் திறனாளிகள் எளிதாக வாக்களிக்க பிரத்யேக வசதி: சட்டரீதியாக உறுதி செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு

கோப்புப்படம்

சென்னை: மாற்​றுத் திற​னாளி​யான வைஷ்ணவி ஜெயக்​கு​மார் உயர் நீதி​மன்​றத்​தில் ஒரு மனு தாக்​கல் செய்​திருந்தார்.

அந்த மனு​வில், கடந்த 2014-ம் ஆண்டு நடந்த மக்​களவை தேர்​தலின்​போது மாற்​றுத் திற​னாளி​கள் வாக்​குச்​சாவடிகளை எளி​தில் அணுகி வாக்​களிக்​கும் வகை​யில் தேவை​யான வசதி​களை சட்​டப்​பூர்​வ​மாக செய்து கொடுக்​க​வும், வசதி​கள் செய்​யப்​பட்டு இருப்​பதை உறுதி செய்​ய​வும் தேர்​தல் ஆணை​யத்​துக்கு உத்​தர​விட வேண்​டும் என கோரி​யிருந்​தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எம்​.எம்​.வஸ்​தவா மற்​றும் நீதிபதி ஜி.அருள்​முரு​கன் ஆகியோர் அடங்​கிய அமர்​வில் விசா​ரணைக்கு வந்​தது. அப்​போது மனு​தா​ரர் தரப்​பில், மாற்​றுத் திற​னாளி​கள் சட்​டத்​தின்​கீழ் வகுக்​கப்​பட்​டுள்ள விதி​களை தேர்​தல் ஆணை​யம் ஏற்​றுக்​கொண்​டுள்​ளது. வாக்​குச்​சாவடிகளை அணுகும் வசதி​களை ஏற்​படுத்தி கொடுக்​க​வும் பார்​வையற்​றோர் வாக்​களிக்க உரிய வசதி​களை செய்து கொடுக்​க​வும் உத்​தர​விட வேண்​டும் என வாதிடப்​பட்​டது.

அதையடுத்து நீதிப​தி​கள், தேர்​தலில் வாக்​களிக்க மாற்​றுத்​திற​னாளி​களுக்​கான வசதி​களை ஏற்​படுத்தி கொடுக்​க​வும், அதன்​படி மாற்​றுத்​திற​னாளி​களுக்​கான சட்ட விதி​கள் முழு​மை​யாக அமல்​படுத்​தப்​படு​வதை​யும் தேர்​தல் ஆணை​யம் உறுதி செய்ய வேண்​டும். ஏற்​கெனவே நடை​பெற்ற தேர்​தலில் இந்த விதி​கள் முழு​மை​யாக அமல்​படுத்​தப்​பட்​டுள்​ளதா என்​பது குறித்​தும் ஆய்வு செய்து விரி​வான பதில்​மனு தாக்​கல் செய்ய வேண்​டும் என தேர்​தல் ஆணை​யத்​துக்கு உத்​தர​விட்டு வி​சா​ரணையை 4 வார காலத்​துக்​கு நீதிப​திகள்​ தள்ளி வைத்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x