Published : 17 Sep 2025 06:33 AM
Last Updated : 17 Sep 2025 06:33 AM

திருமண மண்டபம் கட்ட பக்தர்கள் நன்கொடை தரவில்லை: தமிழக அரசின் மேல்முறையீட்டு வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கருத்து

புதுடெல்லி: திருமண மண்​டபம் கட்ட பக்​தர்​கள் நன்​கொடை தரவில்லை என்​றும், கோயில் நிதி​யில் திருமண மண்​டபம் கட்​டு​வதற்கு பதிலாக கல்வி நிலை​யங்​களை​யும், மருத்​து​வ​மனை​களை​யும் கட்​டலாம் எனவும் தமிழக அரசின் மேல்​முறை​யீட்டு வழக்கை விசா​ரித்த உச்ச நீதி​மன்ற நீதிப​தி​கள் கருத்து தெரி​வித்​துள்​ளனர்.

இதுதொடர்​பாக மதுரை மாவட்​டம் எழு​மலையைச் சேர்ந்த ராம ரவிக்​கு​மார் என்​பவர் உயர் நீதி​மன்ற மதுரை கிளை​யில் தாக்​கல் செய்​திருந்த மனு​வில், “பழநி தண்​டா​யுத​பாணி சுவாமி கோயிலுக்கு சொந்​த​மான நிதி​யிலிருந்து ரூ.4.54 கோடி மதிப்​பீட்​டில் உத்​தம​பாளை​யத்​தில் திருமண மண்​டபம் கட்ட முடிவு செய்​யப்​பட்​டுள்​ளது. இது அறநிலை​யத்​துறை விதி​களுக்கு எதி​ரானது. கோயில் நிதி​யில் திருமண மண்​டபம் கட்​டக்​கூ​டாது. உத்​தம​பாளை​யம் திருக்​காளத்​தீஸ்​வரர் மற்​றும் நரசிங்​கப் பெரு​மாள் கோயில் பெயரில் உத்​தேச​மாக ரூ.400 கோடி நிதி உள்​ளது. இந்​நிலை​யில், பழநி கோயில் நிதியை பயன்​படுத்தி உத்​தம​பாளை​யத்​தில் திருமண மண்​டபம் கட்ட தடை விதிக்க வேண்​டும்” எனக் கோரி​யிருந்​தார்.

இந்த வழக்கை விசா​ரித்த உயர் நீதி​மன்ற மதுரை கிளை, அது தொடர்​பான அரசாணையை ரத்து செய்து கடந்த மாதம் உத்​தர​விட்​டது.

இந்த உத்​தரவை எதிர்த்து தமிழக அரசு சார்​பில் உச்ச நீதி​மன்​றத்​தில் மேல்​முறை​யீடு செய்​யப்​பட்​டது. இந்த மனு மீதான விசா​ரணை உச்ச நீதி​மன்ற நீதிப​தி​கள் விக்​ரம்​நாத், சந்​தீப் மேத்தா ஆகியோர் அடங்​கிய அமர்​வில் நடந்​தது. அப்​போது இதுதொடர்​பாக உயர் நீதி​மன்ற மதுரை கிளை பிறப்​பித்​துள்ள உத்​தர​வுக்கு இடைக்​கால தடை விதிக்க மறுத்த நீதிப​தி​கள், பக்​தர்​கள் அளிக்​கும் காணிக்கை திருமண மண்​டபங்​களை கட்​டு​வதற்​காக அல்ல. அந்த திருமண மண்​டபங்​களில் ஆபாச பாடல்​களை ஒலிபரப்ப கோயில் நிலம் பயன்பட வேண்​டுமா என்​றும் கேள்வி எழுப்​பினர். மேலும் திருமண மண்​டபங்​களுக்கு பதிலாக பள்​ளி, கல்​லூரி​கள் என கல்வி நிலை​யங்​களை​யும், மருத்​து​வ​மனை​களை​யும்​ கட்​டலாம்​ என கருத்​து தெரி​வித்​து வி​சா​ரணை​யை நவ.19-க்​கு தள்​ளி வைத்​துள்​ளனர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x